மகளிர்மணி

கத்தரிக்காய் கசகசா கறியமுது

கத்தரிக்காய் கசகசா கறியமுது செய்வது எப்படி?

DIN

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் பெரியது- 4

கசகசா- 2 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய்- 4

தேங்காய்த் துருவல்- 2 மேசைக்கரண்டி

இஞ்சி- 1 சிறு துண்டு

பூண்டு- 1 பல்

மஞ்சள் தூள்- 1 சிட்டிகை

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு, சீரகம்- தலா அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை- 1 ஈர்க்கு

செய்முறை:

கத்தரிக்காயை நடுத்தர அளவுத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். கசகசாவை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நன்றாகப் பொடிக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் சீரகம், கறிவேப்பிலையைச சேர்த்து சிறிது வறுத்து, கத்தரிக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, கசகசாப் பொடிகளைச் சேர்த்து அரை கிண்ணம் தண்ணீர் விடவும்.

உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது கிளறிவிட்டு, காய் நன்றாக வெந்து எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் இறக்கிவிடவும்.

-எஸ்.ரமணி, சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT