விமலா சடையப்பன்
நரைமுடி நீங்க வேண்டுமென்றால், கறிவேப்பிலையை பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
மணதக்காளிக் கீரையைப் பாசிப் பயறுடன் கூட்டு சேர்த்து உண்டு வர ரத்த மூலம் குணமாகும்.
பொடுகு நீங்க, கசகசாவைப் பாலில் அரைத்துத் தலைக்குத் தடவி வர வேண்டும்.
-முக்கிமலை நஞ்சன்
வெண்டைக்காய் வதக்கும்போது நூல், நூலாக வரும். அதற்கு ஒரு எலுமிச்சம்பழச் சாற்றை ஊற்றி கிளறினால் நூல், நூலாக வராது.
உளுந்து வடைக்குச் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்தால் மெதுவாக இருக்கும்.
முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, சாப்பிட்டு வந்தால் ரத்தச் சோகை வரும்.
குழந்தைகள் பால் பாட்டில், டம்ளர் ஆகியவற்றைக் கழுவ புளித்த இட்லி மாவைப் பயன்படுத்தலாம்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலந்து குடிக்கவும்.
கொள்ளு ரசம் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும்.
சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி, சம அளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் தாய்ப் பால் பெருகும்.
இடுப்பில் புடவைகட்டி கறுப்பாய் புண்ணாய் இருந்தால், கடுக்காயை சந்தனக் கல்லில் உரசி புண்கள் மேல் தடவினால் கறுப்பு மறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.