மகளிர்மணி

சமையல்... சமையல்... இந்த வாரம் பயிறு வகைகள்!

பயிறு வகைகளை கொண்டு என்னென்ன உணவு வகைகளை செய்யலாம் என்பதைக் காணலாம்.

தினமணி செய்திச் சேவை

பயிறு வகைகளை கொண்டு என்னென்ன உணவு வகைகளை செய்யலாம் என்பதைக் காணலாம்.

நவதானிய அடை

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்

உளுந்தம் பருப்பு - 1/4 கிண்ணம்

துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்

கடலைப் பருப்பு - 3/4 கிண்ணம்

நவதானியங்கள் ஒவ்வொன்றும் - ஒரு பிடி அளவு

மிளகாய் வற்றல் - 20

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பெருங்காயம் - வாசனைக்கு

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை: புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு , கடலைப் பருப்பு, நவதானியங்கள் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அடுத்த நாள் அவற்றைக் களைந்து உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து எடுத்து பெருங்காயத்தைப் போட்டு கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி, எண்ணெயும் நெய்யுமாக கலந்து அதன் மேல் ஊற்றி, அடை பொன்னிறமாக இருபுறமும் வெந்த பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

முளைகட்டிய பயறு தோசை

தேவையான பொருள்கள்:

பாசிப்பயறு, கருப்புச் சுண்டல், வெள்ளைச் சுண்டல் - தலா 1/2 கிண்ணம்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள், மிளகு - தலா 1/4 தேக்

கரண்டி

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - 2 கொத்து

இஞ்சி - 1 துண்டு

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு , எண்ணெய்- தேவையான அளவு

ராகி மாவு - 2 மேசைக்கரண்டி

செய்முறை: பாசிப்பயறு, வெள்ளைச் சுண்டல், கருப்புச் சுண்டலை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதைக் களைந்து, தண்ணீரை வடிகட்டி மேலே காட்டன் துணியால் மூடி, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். இதேபோல் மூன்று நாள்களுக்கு களைந்து துணியில் கட்டி வைக்கவும். மூன்று நாள்கள் கழித்து பயறுகள் நன்றாக முளை விட்டிருக்கும். மிக்சி ஜாரில் முளைக்கட்டிய பயறுகள், சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, மிளகு, இஞ்சி, சிறிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ராகி மாவை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

கொள்ளுப் பொங்கல்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கிண்ணம்

கொள்ளு - 1/4 கிண்ணம்

உப்பு - சிறிதளவு

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தண்ணீர் - 4 டம்ளர்

நெய் - 1 தேக்கரண்டி

மிளகு , சீரகம் - தலா 1/4 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி - 10

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து பச்சரிசி, கொள்ளு எடுத்து வறுத்து நன்றாகக் களைந்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியைத் தாளித்து பொங்கலில் சேர்க்கவும். கமகமக்கும் கொள்ளுப் பொங்கல் தயார்.

சாமை இனிப்புப் பொங்கல்

தேவையான பொருள்கள்:

சாமை அரிசி - 250 கிராம்

பாசிப் பருப்பு - 100 கிராம்

நெய் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 3 பங்கு

நெய் - 1 தேக்கரண்டி

முந்திரி - 10

உலர் திராட்சை - 15

பால் - 1/4 கிண்ணம்

வெல்லம் - 1/2 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை: முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து பாகு தயார் செய்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது நெய் சேர்த்து, சாமை அரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தண்ணீர் விட்டு, நெய்யில் வறுக்கவும். பிறகு முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வேகவைத்து, வெல்லப் பாகு ஊற்றி நன்கு கிளறவும். அதில் பால் சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவும். தித்திக்கும் சாமை சர்க்கரைப் பொங்கல் ரெடி.

-செளமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையின் சீரான வளர்ச்சியை அரசு உறுதிசெய்யும்: முதல்வர் ஸ்டாலின்

சன்டே ஜிம் கேர்ள்... மஹிமா குப்தா!

உங்கள் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவேற்றப்பட்டுவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?

வடகிழக்கு பருவமழை - நீர்நிலைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

SCROLL FOR NEXT