விமலா சடையப்பன்
சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால் இட்லி மல்லிகைப்பூ போல் இருக்கும்.
சாம்பாரில் காரம் அதிகரித்துவிட்டால், சிறிது கடலை மாவைக் கலக்குங்கள். காரம் சரியாகிவிடும்.
ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால் தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.