மகளிர்மணி

சாதனை சிறுமி...

செஸ் ஆட்டத்தில், கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் போன்ற மூன்று பிரிவுகளில், 'ஃபிடே' மதிப்பீடுகளை இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் பெற்ற செஸ் பெண் வீராங்கனை என்ற பெருமையை தில்லியைச் சேர்ந்த ஆறு வயதான ஆரினி பெற்றுள்ளார்.

பனுஜா

செஸ் ஆட்டத்தில், கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் போன்ற மூன்று பிரிவுகளில், 'ஃபிடே' மதிப்பீடுகளை இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் பெற்ற செஸ் பெண் வீராங்கனை என்ற பெருமையை தில்லியைச் சேர்ந்த ஆறு வயதான ஆரினி பெற்றுள்ளார். கிளாசிக்கல் போட்டிகளில் 1553, ரேபிட் போட்டிகளில் 1550 , பிளிட்ஸில் 1498 மதிப்பீடுகளைப் பெற்றுள்ளார்.

மிகக் குறைந்த வயதில் 'ஃபிடே' மதிப்பீடுகளைப் பெற்ற செஸ் பெண் வீராங்கனையாக 6 வயது 4 மாதம் ஆன உத்ரிதி பட்டாச்சார்யா இருந்தார். உத்ரிதியின் சாதனையை ஆரினி முறியடித்துள்ளார்.

ஆரினியின் தந்தையும், செஸ் ஆட்டப் பயிற்சியாளருமான சுரேந்தர் லஹோட்டி கூறியது:

'நாங்கள் ஆரினிக்கு வீட்டிலேயே செஸ்ஸின் மூன்று பிரிவுகளிலும் பயிற்சி கொடுத்தோம். விளையாட வைத்தோம். எங்களுக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகுதான் ஆரினியை அதிகாரபூர்வ போட்டிகளுக்கு அனுப்பினோம். ஆரினியின் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்குத் திருப்தி. மகிழ்ச்சி. எங்கள் உழைப்பு வீண் போகவில்லை. ஆரினியின் திறமைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆரினியைத் தயார்படுத்துவதில் நேரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். இந்த நிமிடத்திலும், நான் ஆரினியை போட்டி ஒன்றில் பங்கெடுக்கச் சொன்னால், ஆரினி தயாராக இருக்கிறார். ஆரினிக்கு ஒரு வயதானதும் டி.வி.யில் பார்த்து செஸ் ஆட்டத்தில் ஆர்வம் வந்தது. மிகக் குறைந்த வயதில் 'கிரான்ட் மாஸ்டர்', 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' ஆக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அதற்காக ஆரினி பயிற்சி பெற்று வருகிறார்' என்கிறார்' சுரேந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!

ரஃபேல் போர் விமானத்தில் முதல்முறையாக பறந்த குடியரசுத் தலைவர்!

வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த யானை இறந்தது எப்படி?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இதனால் திரையரங்குக்குச் செல்வதில்லை: செல்வராகவன்

கூடங்குளம் அணு உலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT