மகளிர்மணி

வாழைப்பூ அரைக்கீரை பொரியல்

வாழைப்பூவை நன்றாகச் சுத்தம் செய்யவும். துவரம் பருப்பில் தேவையான தண்ணீரைவிட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடாக வேக வைக்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ -1

அரைக்கீரை -1 கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்தது)

மஞ்சள் பொடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 15

துவரம் பருப்பு - 50 கிராம்

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

வாழைப்பூவை நன்றாகச் சுத்தம் செய்யவும். துவரம் பருப்பில் தேவையான தண்ணீரைவிட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடாக வேக வைக்கவும். சுத்தம் செய்த வாழைப்பூவை தேங்காய்த் துருவல் போல் அரைத்து, மோர் கலந்த தண்ணீரில் ஊறவைக்கவும். கீரையைப் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் தாளித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர், வாழைப்பூவைச் சேர்த்து தேவையான உப்பு போட்டுக் கிளறவும். சிறிது நேரம் கழித்து நீரை வேகவைத்துள்ள துவரம் பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் நன்றாக வெந்து பொரியல் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... தாரணி!

மெக்சிகோ அரசுக்கு எதிராக Gen - Z போராட்டம்! காவல் அதிகாரிகள் 100 பேர் காயம்!

பெண்கள் சேவை மையத்தில் வேலை: பட்டதாரி பெண்களுக்கு வாய்ப்பு!

1 முதல் பிளஸ் 2 வரை அரையாண்டுத் தேர்வு: டிச. 10ல் தொடக்கம்

இணையதளத்தில் திருட்டுத்தனமாக திரைப்படங்கள் பதிவேற்றம்: சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் கைது!

SCROLL FOR NEXT