மகளிர்மணி

பிடிக் கொழுக்கட்டை

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு - 2 கிண்ணம்

வெல்லம்- 1 கிண்ணம்

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

நெய் - சிறிதளவு

ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி

எள்-3 தேக்கரண்டி (வறுத்தது)

செய்முறை:

வெல்லத்தைச் சுத்தம் செய்துகொண்டு, சிறிது தண்ணீரைவிட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவு, எள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். வெல்லக் கரைசலை மீண்டும் ஒரு கொதி வைத்து, மாவுடன் ஊற்றி நன்றாகப் பிசையவும். கலவை லேசாக ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தம்! எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன?

சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

உரிமையை மீட்டெடுப்பதில் காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் துணை நிற்கிறது: பாக். பிரதமர்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்!

திருக்குறள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்களை விளக்கிய முதல்வர் Stalin

SCROLL FOR NEXT