தேவையான பொருள்கள்:
முளைக்கீரை- 1 கட்டு (சுத்தம் செய்தது)
கோஸ்- 50 கிராம் நறுக்கியது
கடுகு, உளுந்தம் பருப்பு- தாளிக்க
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சீரகம்- அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்-4
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
பாசிப் பருப்பு- 50 கிராம்
சின்ன வெங்காயம்- 10
செய்முறை:
பாசிப் பருப்பை வறுத்து வேகவைக்கவும். முளைக்கீரையை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கோஸையும் வேக வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம், கீரையை சேர்த்து வதக்கி, சிறிது நேரம் வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும், தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.