தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 300 கிராம்
உளுந்தம் பருப்பு, வெந்தயம் - தலா 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரவே ஊற வைத்து நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும். உளுந்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து தனியாக அரைத்தவுடன் இரண்டு மாவுக் கலவையையும் ஒன்றாக்கி, ஒரு இலுப்புச்சட்டியில் மாவை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு நல்லெண்ணையை ஊற்றி, எண்ணெய் திரண்டு வரும் வரை கைவிடாமல் கிளறி நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து உருண்டையாகப் பிடிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.