மகளிர்மணி

இணையத்தில் வாசிப்போம்...

கரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

பொ ஜெயச்சந்திரன்

'கரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. எனினும், வாசிப்போருக்காக ஆவணப்படுத்தி வைப்பது எழுத்தாளர்களின் சமூகக் கடமை. என்னுடைய நூல்களை 'ஆர்கேவ்.காம்'-இல் பதிவிடுகிறேன்.

அறிவியல், சமூகவியல், இறையியல், கணினியியல் போன்ற பல துறைகளைச் சார்ந்து மொழிபெயர்த்துள்ளேன். தமிழ் வர்ச்சுவல் அகாதெமியில் எனது நூல்களை வாசிக்கலாம். பெண்ணிதழ்களையும் அதில் படிக்கலாம். எனது நூல்களை மாணவர்களுக்குப் பரிசாக அளிக்கிறோம். நூலகங்களுக்கும் இலவசமாக வழங்குகிறோம்'' என்கிறார் முனைவர் செ.ராஜேஸ்வரி.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகத்தன்மைகளுக்குச் சொந்தக்காரரான அவர் மதுரையில் வசித்து வருகிறார். தமிழ்நாடு அரசின் மூன்று விருதுகளையும், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ள அவரிடம் பேசியபோது:

'என் அப்பா பிரபல ஜோதிடர். சிறுவயதிலேயே நானும், என் தம்பி, தங்கையும் ஜோதிடம் கற்றோம். கடவுள் மீதான பற்றும் உருவானது. ஆங்கில வழியில் பள்ளியில் படித்த நான், கல்லூரியில் தமிழ் படித்தேன். தமிழ், ஆங்கில மொழிகளிலும் நல்ல பயிற்சி இருந்ததால், மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வமும், அனுபவமும் கிடைத்தது. 'மொழிபெயர்ப்பில் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றேன்.

கிரேக்கம், எபிரேயம் வாசிக்கவும் எழுதவும் பயிற்சி உண்டு. சம்ஸ்கிருதம் இரண்டு பருவத் தேர்வுகள் முதுகலையில் படித்துள்ளேன். ஆசிரியர் ஆய்வியல் நிறுவனத்தில் என்சைக்ளோபீடியா தயாரிப்பில் பணி

புரிந்தபோது, ஜப்பான் மொழியைச் சொல்லிக் கொடுத்தார்கள். அதனை ஜப்பான் எழுத்துகளில் படிக்காமல், 'ரோமாஜின்' எனப்படும் ஆங்கில எழுத்துகள் வழியாகப் படித்தேன். இதனால் 'ஜப்பான் மொழியைக் கற்பது எளிது' என்ற நூல் எழுதினேன். எபிரேய மொழிக்கும், தமிழுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

டேவிட்சனின் எபிரேய இலக்கணம் நூலின் முதல் பத்து இயல்களை மொழிபெயர்த்து மாணவர்களுக்கு கையேடாக வழங்கியுள்ளேன். செவ்வியல் மொழிகளில் தமிழ், எபிரேயம், கிரேக்கம், சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளிலும் பயிற்சி உள்ளது.

'முன்னோர் வழிபாடு', 'யானைக் கடவுள்', 'பெண் பூப்பின் புனித வழிபாடு', 'வேளாண் மரபின் விதைப்பும் பூப்பும்', 'இரு நிலத்தில் திருமுருகன்' உள்ளிட்ட பத்து நூல்கள், 'சாமிகளின் சரித்திரம்', 'வழிபாட்டின் வேர்களைத் தேடி' உள்ளிட்ட 8 சமய வழிகாட்டி நூல்கள், சமயப் பண்பாட்டு ஆய்வு சார்ந்த 11 நூல்கள், 5 திறனாய்வு நூல்கள், 3 கவிதை நூல்கள், 1 சிறுகதை நூல் ஆகியவற்றை எழுதியிருக்கிறேன். கவிதை மொழிபெயர்ப்புக்கு 5 மொழிபெயர்ப்பியல் ஆய்வு நூல்களை எழுதியுள்ளேன். ஜோதிடம் தொடர்பான பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

கீட்ஸ், ஷெல்லி பாட்ஷா, பப்லோ நெருடோ, மாயா ஏஞ்சலோ, லார்ட் பைரன், வில்லியம் ஷேக்ஸ்பியர், ரவீந்தரநாத் தாகூர் உள்ளிட்டோரின் ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழி

பெயர்த்து, மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகள், பாடல்கள் 'மணலும் நுரையும்' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு இரு நூல்களாக வெளிவந்துள்ளன. 'தமிழ் பேசாதவர்களுக்கு தமிழ்', ' ஈஸி இங்கிலீஷ்' என்ற கையேடுகளைத் தயாரித்து மாணவர்களுக்கு அளித்துள்ளேன்.'' என்கிறார் முனைவர் செ.ராஜேஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT