இனிப்புச் சப்பாத்தி
கோதுமை மாவை உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 500 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பாதாம் பருப்பு - 20
முந்திரிப் பருப்பு - 20
உப்பு, எண்ணெய்,
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கோதுமை மாவை உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும். பாதாம், முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
சப்பாத்திகள் சூடாக இருக்கும் போதே அதன் மீது நெய் தடவி, பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரிப் பருப்பு மற்றும் சர்க்கரையைத் தூவி, அந்த சப்பாத்தியை இரண்டாக மடித்து, மீண்டும் தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான இனிப்புச் சப்பாத்தி தயார்.
ஏ. மூர்த்தி