முகப்பு
மகளிர்மணி

அடுப்பறை அலப்பறை....

மாவு ஆட்டுறவருக்கு ஞாபக மறதி... எப்படிச் சொல்றே?

பகிர்:

'மாவு ஆட்டுறவருக்கு ஞாபக மறதி...''

'எப்படிச் சொல்றே?''

'எதிர்த்த ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, இங்கே வந்து மாவு ஆட்டுறார்!''

Advertisement

Advertisement

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.



'ஆபிஸூக்குப் போனால் மேனேஜரோடு சண்டை, வீட்டுக்குப் போனால் மனைவியோட சண்டை, அதான் கோயிலுக்கு வந்தேன்..''

'அப்புறம் ஏன் கவலை?''

'பிரசாதம் தரலைன்னு கோயில் பூசாரியிடம் சண்டை போட்டுட்டேன்!''

-இந்துகுமரப்பன், விழுப்புரம்.



'படம் போட்டதும் ஏன் எல்லோரும் தும்முறாங்க?''

'இது மசாலாப் படமாச்சே!''

-எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.



'உங்க மாஸ்டரை ஏன் வேலையில் இருந்து நிறுத்திட்டாங்க?''

'விறகு அடுப்புல சமைக்கவே தெரியாதாம்!''



'என்ன இது? உங்க ஆபிஸ் ஃபைல் எல்லாம் கேன்டீனில் இருக்கே?''

'எங்க ஆபிஸ்ல வேலை செய்யறவங்க 'முக்கால்வாசி நேரம்' கேன்டீனில்தானே இருக்காங்க, அதான்!''



'என்ன சார்... மொய் வைக்காமல் சாப்பிட்டு வந்துட்டீங்களே?''

'சாப்பாடு நல்லா இருந்தால்தான் மொய் வைப்பது என் வழக்கம்!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments