முகப்பு
மகளிர்மணி

அடுப்பறை அலப்பறை....

என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.

Updated On : 14 ஜூன் 2026, 4:06 am IST
பகிர்:

'என் மாமியாருக்கு வாய்க்கு ருசியா எல்லாம் சமைச்சுப் போட்டேன்... எதுவுமே சாப்பிடலை.'

'அப்புறம் என்ன செஞ்சே?'

'கடைசி வரைக்கும் பட்டினி போட்டேன்!'

Advertisement

Advertisement

-இந்து குமரப்பன்



'உங்க வீட்டில் எதுக்கு மூன்று வேலைக்காரிங்க?'

'வீட்டு வேலை செய்ய, சீரியல் கதை சொல்ல, சண்டை போடன்னு மூன்று பேர்...'



'இந்த வருஷம் மாம்பழம் நல்ல விளைச்சலாமே?'

' யார் இல்லைன்னா... அதுக்காக யாராவது இலவசமாகக் கொடுப்பாங்களா?'



'என்ன இது... டைனிங் டேபிளில் புகார் பெட்டி?'

'எங்க வீட்டில் சமையலில் என்ன குறைன்னாலும், நேரடியாகச் சொல்லக் கூடாது...'



'உன் சமையலை வாயில் வைக்கவே முடியலையே?'

'அப்படின்னா மிக்ஸியில் அடிச்சி ஜூஸா குடிங்களேன்...'

-அ.சுஹைல் ரஹ்மான்



'இந்த சமையல் சூப்பரா இருக்கே... என்னென்ன சேர்த்து செஞ்சீங்க?'

'மறந்துட்டேன். இருங்க... யூடியூப் பார்த்துச் சொல்றேன்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.