பாப்பா பாப்பா கதை கேளு
குட்டி ஜப்பான் கதை கேளு
நாட்டுத் தலைநகர் டோக்கியோவாம்
நன்றாய் உழைக்கும் மனிதர்களாம்!
எறும்பைப் போல சுறுசுறுப்பாம்
எதிலும் உயரும் தன்னம்பிக்கையாம்
கொண்ட நாடு ஜப்பானாம்
இன்னொரு பெயர் நிப்பானாம்!
ஹிரோஷிமா நாகசாகி என்ற
பெரிய இரு நகரங்களாம்
அமெரிக்க அரக்கன் வீசிய
அணுகுண்டு தாக்கி அழிந்தனவாம்!
அணுகுண்டால் அழிந்த நகரங்களும்
அதிசயம் போல் இன்று வளர்ந்தனவாம்
எரிமலை மிகுந்த ஜப்பானாம்
எதையும் தாங்கும் மக்களாம்!
இயற்கை சீற்றமும் வந்திட்டால்
இயல்பாய் வாழவும் கற்றாராம்
சீறிப்பாயும் புல்லட் ரயிலால்
புதிய வேகம் படைத்தவராம்!
அழிந்த போதும் சோராத
அவர்தம் உழைப்பைப் போலவே
நாமும் நாட்டை உயர்த்துவோம்
நல்ல பாதை காட்டுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.