சிறுவர்மணி

விடுகதைகள்

1. கண்டம் விட்டு கண்டம் பாய்வான்; நெருப்பைக் கக்கியபடி பாய்ந்து செல்வான். அவன் யார்? 2. ஓட்டையில்லாத கட்டில்; எந்தப் பக்கமும் நகர்த்த முடியாது. அது என்ன? 3. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்? 4

இரா.ரெங்கசாமி

1. கண்டம் விட்டு கண்டம் பாய்வான்; நெருப்பைக் கக்கியபடி பாய்ந்து செல்வான். அவன் யார்?

2. ஓட்டையில்லாத கட்டில்; எந்தப் பக்கமும் நகர்த்த முடியாது. அது என்ன?

3. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?

4. வட்டமாக இருப்பான்; தீ எரிய உதவுவான். அவன் யார்?

5. பால்காம்பில் ஒன்றைக் கண்ணுக்குட்டிக்கு விட்டிருக்கு. அது என்ன?

6. கறிக்கு உதவாத கறி. அது என்ன?

  7. அவசரத்துக்கு உதவுவான்; அதிவேகமாகவே செல்வான். அவன் யார்?

  8. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?

  9. கொப்பரையில் பூங்கொத்து. அது என்ன?

10. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

11. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?

12. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்?

13. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

விடைகள்:

1.ராக்கெட்

2.திண்ணை

3.சாக்பீஸ்

4.வரட்டி

5.மோதிர விரல்

6.அடுப்புக்கரி

7.ஆம்புலன்ஸ் வண்டி

8.விறகு

9.கோன் ஐஸ்

10.நெருப்புக் கோழி

11.நாணயம்

12.அலாரம்

13.சேமியா பாயசம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

அமெரிக்காவில் இந்தியப் பெண் சுட்டுக்கொலை; இளைஞர் கைது

விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய செயலி: முதல்வர் ஸ்டாலின்

விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT