சிறுவர்மணி

விடுகதைகள்

  1. அரைக்காசு கூட செலவில்லாமல் அகில லோகமும் சுத்தி வரலாம். அது என்ன?   2. மண்ணைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றான். அவன் யார்?   3. செத்த மாட்டை உப்புத் தடவி வச்சிருக்கு. அது என்ன?   4. கதிர் அடிக்காத க

இரா.ரெங்கசாமி

  1. அரைக்காசு கூட செலவில்லாமல் அகில லோகமும் சுத்தி வரலாம். அது என்ன?

  2. மண்ணைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றான். அவன் யார்?

  3. செத்த மாட்டை உப்புத் தடவி வச்சிருக்கு. அது என்ன?

  4. கதிர் அடிக்காத களம். அது என்ன?

  5. உயரத்திலிருந்து குதித்தாலும் ஒரு காயமும் ஏற்படாது. அது என்ன?

  6. பச்சைக் கீரை பொரிக்க உதவாது. அது என்ன?

  7. பேப்பர் இல்லை; பென்சில் இல்லை; கணக்கோ கச்சிதம். அது என்ன?

  8. அழகான பந்து விளையாட உதவாது. அது என்ன?

  9. தலையிலே தொப்பி. அது என்ன?

10. நாக்கு இல்லாவிட்டால் அவனுக்கு மதிப்பில்லை. அவன் யார்?

11. பணத்தை அள்ளித் தரும் பூதம். அது என்ன?

12. வண்டி உருண்டோட அச்சாணி தேவை. அது என்ன?

13. உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

14. ஊரையே முழுங்கி ஏப்பம் விடும் அரக்கி. அவள் யார்?

15. அண்டாவுக்கு அடியிலே இருக்கும் தண்ணீரு குறையாது. அது என்ன?

16. வாலுள்ள ராஜா; வானுலகு போறான். அவன் யார்?

விடைகள்:

  1.கனவு 2.மண்புழு 3.கருவாடு 4.போர்க்களம் 5.அருவி நீர் 6.பாசி 7.கால்குலேட்டர் 8.லட்டு 9.டோப்பா 10.மணி 11.லாட்டரிச் சீட்டு 12.துடுப்பு 13.மச்சம் 14.கடல் 15.கிணற்று நீர் 16.காற்றாடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு

‘நாயகன்’ மறு வெளியீட்டுக்குத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சா்க்கரை நோயைத் தடுக்க தவறும் ஐ.டி. ஊழியா்கள்: ஆய்வில் தகவல்

பருவமழை தொடங்கியும் குறையவில்லை: தமிழகத்தில் தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக அதிகரிப்பு

பிரதமா் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா பயணம்: டிரம்ப் தகவல்

SCROLL FOR NEXT