வெள்ளை கங்காரு!
வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உண்மையிலேயே பிள்ளையை வயிற்றில் கட்டி வளர்த்துவருவது கங்காருதான்! பிறந்த பின்னும் சிலகாலம் வயிற்றுக்கு வெளியே பை போன
வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உண்மையிலேயே பிள்ளையை வயிற்றில் கட்டி வளர்த்துவருவது கங்காருதான்!
பிறந்த பின்னும் சிலகாலம் வயிற்றுக்கு வெளியே பை போன்ற அமைப்பில் வைத்து கங்காரு தன் குட்டிகளை வளர்க்கிறது. வழக்கமாக கங்காரு கருப்பு நிறத்தில்தான் இருக்கும். பத்தாயிரம் கங்காரு பிறந்தால் அதில் ஒன்று வெள்ளையாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டென் மார்க்கில் பிறந்திருக்கும் இந்த வெள்ளை கங்காருவைப் பார்க்க மிருகக் காட்சி சாலைக்குக் குழந்தைகளின் கூட்டம் அலைமோதுகிறதாம்.