முகப்பு
சிறுவர்மணி

புதிய பாடல்: மழலை யேசு பிறந்தாரே!

அவரே அன்பின் அடையாளம் அன்னை மரியின் கொடையாகும் புவியே போற்றும் பரிசுத்தன் புண்ணியன் யேசு வரவாகும்! எளியோர்க் கிரங்கும் இறையாகும் எருசலேம் கண்ட ஒளியாகும் வளமே அவரின் வரமாகும் வாசனைப் பூவின் எழிலாகும்!

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:40 PM
பகிர்:

அவரே அன்பின் அடையாளம்

அன்னை மரியின் கொடையாகும்

புவியே போற்றும் பரிசுத்தன்

புண்ணியன் யேசு வரவாகும்!

எளியோர்க் கிரங்கும் இறையாகும்

எருசலேம் கண்ட ஒளியாகும்

வளமே அவரின் வரமாகும்

வாசனைப் பூவின் எழிலாகும்!

மாட்டுத் தொழுவக் குடிலினிலே

மன்னன் யேசு மழலையென

நாட்டில் அன்பே நடைபெறவே

நாயகம் பிறந்தார் எளிமையிலே!

வானவர் தூதன் வந்தாரே

வள்ளல் அருளைத் தந்தாரே

ஞானமும் வழியாய் நின்றாரே

நன்மை பெருகிட அன்பாலே!

மார்கழிப் பனியின் நாளினிலே

மலர்ந்த மரிமகன் தோளினிலே

சேர்ந்த ஆட்டுச் சேயெனவே

சேவித் திடுவோம் நேயனையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.