1. அம்மா புடவையை மடிக்க முடியாது; அப்பா பணத்தை என்ன முடியாது. அது என்ன?
2. கண் காண உருவம் உண்டு; கட்டிப் பிடிக்க உடல் இல்லை. அது என்ன?
3. கண் சிமிட்டி, மணி அடித்து, கண்ணீர் வடிப்பர். அவர்கள் யார்?
4. கண்ணுக்குத் தெரியாதவன் கண்ணை மறப்பான். அவன் யார்?
5. கண்டு காய்காய்க்கும்; கானாமல் பூப்பூக்கும். அது என்ன?
6. கண்டு பூ பூக்கும்; காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
7. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது. கையால் தொட்டால் காணாமல் போகுது. அது என்ன?
8. கண்ணுக்குத் தெரியாததை கணப் பொழுதில் காட்டிடும். அது என்ன?
9. கண் உண்டு பார்க்காது; கால் உண்டு நடக்காது. அது என்ன?
10. சின்னத் தம்பி குனிய வைச்சான். அவன் யார்?
11. நெட்டை அக்கா தாக்குகிறாள்; குட்டை அக்கா தாங்குகிறாள். அவர்கள் யார்?
12. அக்கா வீட்டுக்கு தங்கை போகலாம்; தங்கை வீட்டுக்கு அக்காள் போக முடியாது. அவர்கள் யார்?
விடைகள்:
1.வானம்-விண்மீன்
2.புகை
3.மின்னல், இடி, மழை
4.இமை
5.அத்திமரம்
6.வேர்க்கடலை
7.நீர்க்குமிழி
8.பூதக் கண்ணாடி
9.நார்க் கட்டில்
10.முள்
11.உரல், உலக்கை
12.படி, ஆழாக்கு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.