புதிய பாடல்: பேச்சுக் கலை
சுருக்க மின்றி சுற்றி வளைத்து சொல்லு வது குற்றமே திருத்த மின்றி குழப்ப மாக செப்பு வதும் குற்றமே கூறி யதை திரும்பத் திரும்ப கூறு வதும் குற்றமே மாறு பாடாய் மற்றும் ஒன்றை மயங்கப் பேசல் குற்றமே சொல்லில் உ
சுருக்க மின்றி சுற்றி வளைத்து
சொல்லு வது குற்றமே
திருத்த மின்றி குழப்ப மாக
Advertisement
செப்பு வதும் குற்றமே
கூறி யதை திரும்பத் திரும்ப
கூறு வதும் குற்றமே
மாறு பாடாய் மற்றும் ஒன்றை
மயங்கப் பேசல் குற்றமே
சொல்லில் உண்டு பத்துக் குற்றம்
தவிர்க்கவேண்டும் தம்பி நீ!
நல்ல பயன்கள் விளையு மாறு
சொல்லவேண்டும் எதையும் நீ
உண்மை யோடு பேசி னாலே
நன்மை விளையும் பேச்சினால்
மென்மை யான வார்த்தை களில்
திண்மையோடு பேசு நீ!
சொற்க ளிலே குற்றங் கண்டு
மற்ற வர்கள் சுட்டினால்
குற்றம் நீக்கத் தயங்கி டாதே
துணிந்து பேசு நேர்மையாய்
பேசிப் பேசிப் பழகி னாலே
பேச்சில் கவிதைச்சுவை வரும்
ஆசை யோடு நிறையக் கற்று
ஆழமாகப் பேசு நீ!