சிறுவர்மணி

சிறுவர் பாடல்: நீரே உயி​ருக்கு ஆதா​ரம்!

நீரே உயிருக்கு ஆதாரம்! நீரே உயிருக்கு ஆதாரம் - என்றும் நீர்வளம் காத்தல் அறமாகும்! பூமாதேவிக்குப் பொன்னாடை புவி மீதினில் ஓடிடும் நீரோடை வாழும் உயிர்கள் யாவினுக்கும் - வான் வழங்கிய அமுதக் கொடையாகும்! பூ

வளர்கவி

நீரே உயிருக்கு ஆதாரம்!

நீரே உயிருக்கு ஆதாரம் - என்றும்

நீர்வளம் காத்தல் அறமாகும்!

பூமாதேவிக்குப் பொன்னாடை

புவி மீதினில் ஓடிடும் நீரோடை

வாழும் உயிர்கள் யாவினுக்கும் - வான்

வழங்கிய அமுதக் கொடையாகும்!

பூமியைத் தோண்டி நீர் எடுத்து புவி

வளத்தைக் கெடுத்து நாம் அழித்து

இயற்கை வளத்தை தொலைப்பதுபோல்

இல்லை வேறொரு பழிபாவம்!

நீர்வளம் காக்க முடிவெடுப்போம் - வரும்

சந்ததி வாழ வழிவகுப்போம்

பார்புகழ் வாழ அதுவொன்றே நாம்

செய்திடும் நல்ல செயலாகும்!

வாயிலா ஜீவன்கள் வாழ்ந்திடவும் - புவி

வளத்தைக் காத்து வாழ்ந்திடவும்

யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம்

இனிதே இங்கே வாழ்ந்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT