முகப்பு
சிறுவர்மணி

ஒட்டகமான கிறிஸ்துமஸ் தாத்தா!

இயேசுகிறிஸ்து பிறந்ததும் கிழக்கில் இருந்து மூன்று அரசர்கள் வந்து பார்த்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் மூன்று பேரும் ஓட்டகங்களில் ஏறி வந்தனர். அதில் ஒரு ஒட்டகம் வயதில் சிறியது என்பதால் களைப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:32 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:52 AM

இயேசுகிறிஸ்து பிறந்ததும் கிழக்கில் இருந்து மூன்று அரசர்கள் வந்து பார்த்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் மூன்று பேரும் ஓட்டகங்களில் ஏறி வந்தனர். அதில் ஒரு ஒட்டகம் வயதில் சிறியது என்பதால் களைப்பில் வரும் வழியில் படுத்துவிட்டது. அந்த ஒட்டகத்தின் களைப்பை இயேசுவே வந்து தீர்த்து வைத்ததாகச் சொல்வார்கள்.

அந்த ஓட்டகம் ஆண்டுதோறும் தங்களைச் சந்திக்க வருவதாக சிரியா நாட்டு மக்கள் இப்போதும் நம்புகிறார்கள்.

எனவே சிரியா நாட்டில் பரிசுப் பொருட்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி வருவதில்லை. இன்று வரையில் பரிசுப் பொருட்களுடன் ஒட்டகங்கள்தான் உலா வருகின்றன!

Advertisement



வைக்கோல் குழந்தை!

போலந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று சின்னக் குழந்தைகளை வைக்கோலில் கிடத்துவார்கள். இயேசுகிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததைக் குறிக்கும்விதமாக இப்படிச் செய்கிறார்கள்.

பெளர்ணமி கிறிஸ்துமஸ்!

இயேசுபிரான் பெளர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் கிறிஸ்துமஸ் தினத்தன்று பெளர்ணமி வருகின்றதோ அந்த நாளை விசேஷ கிறிஸ்துமஸ் ஆகக் கொண்டாடுவது வழக்கம்.

இயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிறிஸ்துமஸ் தினத்தன்று பெளர்ணமி வந்துள்ளது.

1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஐந்து தடவைகள் சென்ற நூற்றாண்டில் பெளர்ணமி கிறிஸ்துமஸ் வந்தது. இந்த நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பௌர்ணமி வரும் அபூர்வ நிகழ்வு 2015-ம் ஆண்டு வரும்.



கிறிஸ்துமஸ் மரம்!

முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் போனிவேஸ் என்ற இறைத் தூதரால் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் விழாவின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் மரம் நட்டுக் கொண்டாடும் வழக்கம் முதன்முதலில் ஜெர்மனியில்தான் ஆரம்பமாயிற்று. உலகின் ஒளியான இயேசுவின் அடையாளமாக மெழுகுவர்த்திகளையும் நட்சத்திரங்களையும் மரத்தில் தொங்கவிடுவது வழக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.