முகப்பு
சிறுவர்மணி

அன்பால் கைகோர்த்து...

அன்பில் மக்கள் நனைந்திடவே அகிலம் எங்கும் செழித்திடவே இருளைத் துளைக்கும் மின்னலென இறைவன் யேசு அவதரித்தார். அன்புக்கு அன்பே கைமாறு அஹிம்சைதானே பெரும் பேறு நாதரும் இப்படி உரைத்தாரே நானில மக்களும் நெகிழ்ந

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:54 AM
பகிர்:

அன்பில் மக்கள் நனைந்திடவே

அகிலம் எங்கும் செழித்திடவே

இருளைத் துளைக்கும் மின்னலென

Advertisement

இறைவன் யேசு அவதரித்தார்.

அன்புக்கு அன்பே கைமாறு

அஹிம்சைதானே பெரும் பேறு

நாதரும் இப்படி உரைத்தாரே

நானில மக்களும் நெகிழ்ந்தாரே

பாவம் செய்த மனிதரையும்

பாலன் யேசு மன்னித்தார்

தவறுகள் என்றும் நிலைப்பதில்லை - என்றே

தத்துவம் போதித்தார்.

அண்ணல் யேசு பிறந்த தினம்

அதுவே கிறிஸ்துமஸ் தினமாகும்

அன்பால் நாமும் கைகோர்த்து

அன்றைய தினத்தில் மகிழ்ந்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.