முகப்பு
சிறுவர்மணி

வெள்ளரி!

பச்சை யான வெள்ளரி பார்க்க நல்ல வெள்ளரி இச்சை கொண்ட யாவரும் எளிதில் வாங்கும் வெள்ளரி! தோலை நன்கு சீவியே துண்டு துண்டாய் நறுக்கியே மிளகு உப்பு தூவியே மென்று தின்னும் வெள்ளரி! கோடை வெயில் கொடுமையை குறைக்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:07 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:23 PM

பச்சை யான வெள்ளரி

பார்க்க நல்ல வெள்ளரி

இச்சை கொண்ட யாவரும்

Advertisement

எளிதில் வாங்கும் வெள்ளரி!

தோலை நன்கு சீவியே

துண்டு துண்டாய் நறுக்கியே

மிளகு உப்பு தூவியே

மென்று தின்னும் வெள்ளரி!

கோடை வெயில் கொடுமையை

குறைக்கும் நல்ல வெள்ளரி

பிஞ்சுப் பிள்ளை விரல்கள்போல்

பிடிக்கச் சிறிய வெள்ளரி

கூடை நிறைய உள்ளது

கொடியில் காய்க்கும் வெள்ளரி

ஓடி வந்து வாங்குங்கள்

ஒல்லி யான வெள்ளரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.