முகப்பு
சிறுவர்மணி

பழமொழிகள் பத்து

 1. ஓர் அழகிய பழமொழி ஞாபகத்தில் இருப்பது பணப் பெட்டியில் ஒரு பொற்காசு இருப்பது போல! - ஸ்வீடன்  2. சகோதரர்கள் ஒன்றுபட்டு உழைத்தால் மலையைத் தங்கமாக மாற்றலாம்! - சீனா  3. அறிவு தலைக்குக் கிரீடம், அடக்கம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

 1. ஓர் அழகிய பழமொழி ஞாபகத்தில் இருப்பது பணப் பெட்டியில் ஒரு பொற்காசு இருப்பது போல! - ஸ்வீடன்

 2. சகோதரர்கள் ஒன்றுபட்டு உழைத்தால் மலையைத் தங்கமாக மாற்றலாம்! - சீனா

 3. அறிவு தலைக்குக் கிரீடம், அடக்கம் காலுக்குச் செருப்பு! - ஹீப்ரு

 4. மனம் உறுதியாக இருந்தால் சுண்டெலியால் கூட யானையைத் தாக்க முடியும்! - திபெத்

 5. இரண்டே இரண்டு பேர்தான் உலகில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள்: புகழ், லாபம்! -சீனா

 6. ஒரு வினாடி பொறுமை, பத்து வருடச் சுகம்! - கிரீஸ்

 7. கடன்காரனாக எழுந்திருப்பதை விட சாப்பிடாமல் படுக்கைக்குச் செல்வது நல்லது! - ஸ்பெயின்

 8. ஆட்டுக்குட்டியுடன் படுத்து வானம்பாடியுடன்

     எழுந்திரு! - இங்கிலாந்து

 9. சிரிப்பு நல்ல ரத்தத்தை உண்டாக்குகிறது! - இத்தாலி

 10. ஓர் அங்குல நேரம் ஓர் அங்குலத் தங்கம்! - சீனா

முழு கட்டுரையைப் படிக்க →