முகப்பு
சிறுவர்மணி

மலர்க் கூடை

வாசலில் ஒருமரம் வளர்ந்து இருந்தது! வாசனை மலர்களை வசந்தத்தில் சொரிந்தது! காலையில் அம்மா கண்விழித் தெழுந்தாள்! வேலைகள் முடித்திட விரைவுடன் முனைந்தாள்! வீட்டை வாசலை வீதியைப் பெருக்கிக் கூட்டி வாரியே கூடை

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

வாசலில் ஒருமரம்

வளர்ந்து இருந்தது!

வாசனை மலர்களை

வசந்தத்தில் சொரிந்தது!

காலையில் அம்மா

கண்விழித் தெழுந்தாள்!

வேலைகள் முடித்திட

விரைவுடன் முனைந்தாள்!

வீட்டை வாசலை

வீதியைப் பெருக்கிக்

கூட்டி வாரியே

கூடையில் அள்ளினாள்!

குப்பெனக் கூடையே

பூக்களால் நிறையவே

குப்பைக் கூடையே

பூக்கூடை ஆனது!

மனதையும் வாக்கையும்

மலர்களாய் ஆக்கினால்

மனிதர்தம் வாழ்க்கையும்

மலர்க்கூடை ஆகிடும்!

முழு கட்டுரையைப் படிக்க →