தமிழ்நாட்டில் பாரதியாரைக் கைது செய்தே ஆகவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மிகுந்த தீவிரம் காட்டியபோது, பலருடைய வற்புறுத்தல்களின் பேரில், பாரதியார் புதுச்சேரி சென்று அங்கு தங்கியிருந்தார்.
பாரதியார் புதுச்சேரியிலிருந்த காலத்தில் ஒருமுறை, புயலும் மழையும் ஒன்று சேர்ந்து புதுவையை உலுக்கி எடுத்தது. நான்கு நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியதால், புதுவையே வெள்ளத்தில் மிதந்தது. மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. பறவைகள் எல்லாம் ஆங்காங்கே செத்து, விழுந்து கிடந்தன.
பாரதியார் நண்பர்கள் சிலரைத் திரட்டிக் கொண்டு, வெள்ளத்தில் செத்து மிதந்து கொண்டிருந்த பறவைகளின் உடல்களைச் சேகரித்தார். நீரில்லாத இடமாகப் பார்த்து, பள்ளம் ஒன்றைத் தோண்டி, செத்த பறவைகளை அதில் போட்டுப் புதைத்து, மனிதர்களுக்குச் செய்வது போன்று இறுதிச் சடங்குகளையும் செய்தார்.
அந்த நிகழ்வின் எதிரொலியாகத்தான் பாரதியாரின் உணர்வில் ஒரு பாடல் எழுந்தது -
"காக்கை குருவி எங்கள் சாதி
கடலும் மலையும் எங்கள் கூட்டம்...'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.