1.மலர்ந்த முகம் சாதாரண உணவையே
விருந்தாக்கி விடும்! - இங்கிலாந்து
2.அறிவின் அறிகுறி இடைவிடாத
முகமலர்ச்சி! - பிரான்ஸ்
3.மகிழ்ச்சியுள்ள வழித்துணையால் வழியின் தூரம் குறையும்! - ஜெர்மனி
4.மகிழ்ச்சியான இதயமுள்ளவன்
இடைவிடாத விருந்தைப் பெற்றவனாவான்! - பைபிள்
5.ஒருவன் சிரிக்கும்போதெல்லாம் மரணம்
ஒத்திப் போடப்படுகிறது! - இத்தாலி
6.பேராசை தீர்ந்ததும், மகிழ்ச்சி தொடங்கும்!
- ஹங்கேரி
7.வெங்காயம் கிடைத்ததற்கு ஒருவன் துள்ளிக் குதித்தால், வெல்லம் கிடைத்தால் என்ன செய்வானோ? - அரேபியா
8.வயது செல்லச் செல்ல தோல் சுருங்குகிறது;
ஆனால் மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கி விடும்!
- சாமுவேல் உல்மன்
9.மகிழ்ச்சியை எண்ணலாம்; விரும்பலாம்; அடையலாம். ஆனால் விலைக்கு வாங்க முடியாது!
- மாகஸின் டைஜெஸ்ட்
10.பொறுமையில்லாமல் மகிழ்ச்சியில்லை! - ரஷ்யா
-தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு,
பாண்டிச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.