கண் தானம் விரும்பு...
அன்ன தானம் பசியைப் போக்கும் அந்த வேளை மட்டும் கண்கள் தானம் காலம் முழுதும் காண உதவும் தம்பி! ஏழை கூட உதவும் வள்ளல் இரண்டு கண்கள் தந்தால் வாழும் நாளில் சொல்லி வைத்தால் மறையும் நாளில் வருவார்! மருத்துவர்
அன்ன தானம் பசியைப் போக்கும்
அந்த வேளை மட்டும்
கண்கள் தானம் காலம் முழுதும்
Advertisement
காண உதவும் தம்பி!
ஏழை கூட உதவும் வள்ளல்
இரண்டு கண்கள் தந்தால்
வாழும் நாளில் சொல்லி வைத்தால்
மறையும் நாளில் வருவார்!
மருத்துவர்கள் பொருத்துகிறார்
உறுப்பைத் தானம் பெற்று
திருத்த முடன் சோதித் தபின்
கண்கள் தானம் பெறுவர்!
கற்ற கல்வி கண்க ளாகும்
கண்கள் போன்ற கல்வி
மற்ற வர்க்கு கொடுப்ப துபோல்
விழியைக் கொடுக்க முடியும்!
புழுதி விழியில் விழுந்தி டாமல்
புருவ இமைகள் காக்கும்
விழியைப் பிறர்க்கு தானம் செய்தால்
ஒளியைத் தந்து காக்கும்!
சின்ன மகனைக் கண்ணே என்று
அன்னை கொஞ்சு கின்றாள்
கண்ணின் பெருமை உணர்ந்து கொண்டு
காக்க வேண்டும் தம்பி!