முகப்பு
சிறுவர்மணி

 விழுதாய் வாழ்வோம்!

 படிக்கத் தெரியா எந்தன் அம்மா படிக்க வைத்தார்

Updated On : 30 நவம்பர், 2012 at 3:59 PM
பகிர்:

 படிக்கத் தெரியா எந்தன் அம்மா
 படிக்க வைத்தார்
 அன்று - அட
 படித்து நானும் பட்டம் வாங்கி
 பதவி பெற்றேன்
 இன்று!
 
 படிக்கத் தெரியா எந்தன் அம்மா
 படித்து விட்டார்
 இன்று - நான்
 படித்து விட்டது போல அவரையும்
 படிக்க வைத்தேன்
 நன்று!
 
 கடிதம் போட்டால் தானே படிக்கும்
 படியாய்ப் படிப்பாள்
 அம்மா - ஆம்
 மடலும் கூட எழுதிப் பழகி
 மகிழ்ந்து போவாள்
 அம்மா!
 எழுத்துக் கூட்டிப் படிக்கும் போதே
 எந்தன் உள்ளம்
 மகிழும் - அம்மாவை
 விழுது போல நாளும் தாங்கி
 வாழ வைப்பேன்
 என்றும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.