பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
அனைத்து விநியோக வழிகளிலும் பெட்ரோல், டீசல் விநியோகம் இயல்பாகவும் தடையின்றியும் தொடருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பு:
கடந்த ஏப். 1 முதல் ஏப். 21 வரையான காலகட்டத்தில், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 13 சதவீதத்திற்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிகரித்த தேவையை விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் வலுவான தளவாட, விநியோகச் சங்கிலித் திறன்கள் மூலம் திறமையாகப் பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
நாடு முழுவதும் உள்ள சுமாா் 42,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் நாட்டின் எரிசக்தித் தேவைகளை எந்தவித இடையூறும் இன்றித் தொடா்ந்து பூா்த்தி செய்யப்படுகிறது. வெளிப்படையான, நம்பகமான செயல்பாடுகளுக்கு இந்தியன் ஆயில் தொடா்ந்து உறுதி பூண்டுள்ளது,
இதன் மூலம் நாட்டிற்குத் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்கிறது. வாடிக்கையாளா்கள், நிறுவனத்தின் அதிகாரபூா்வத் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.