முகப்பு
சிறுவர்மணி

காகமும் குயிலும்

காக்கை அக்கா கூடு கட்டிமுட்டை இட்டதாம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

 காக்கை அக்கா கூடு கட்டி
 முட்டை இட்டதாம்
 காட்டுக் குள்ளே இரையைத் தேடிப்
 பறந்து போனதாம்!
 காக்கை போல அடையும் காக்க
 இயலா குயிலுமே
 காலம் பார்த்து அந்தக் கூட்டில்
 தானும் இட்டதாம்!
 
 கணக்குத் தெரியா காக்கை அக்கா
 அடையும் காத்ததாம்
 காக்கை முட்டை பொரித்த தெல்லாம்
 காக்கைக் குஞ்சுகளாம்!
 கணக்கில் சேர்ந்த குயிலு முட்டையும்
 குஞ்சு பொரித்ததாம்
 காக்கைக் கூட்டில் குயிலுக் குஞ்சும்
 வளர்ந்து வந்ததாம்!
 
 இறக்கை முளைத்த போது காக்கை
 உற்றுப் பார்த்ததாம்
 இருக்கும் அந்தக் குயிலுக் குஞ்சைக்
 கண்டு பிடித்ததாம்!
 இறக்கை யடித்து நன்றி சொல்லி
 குயிலும் பறந்ததாம்
 "எங்கிருந் தாலும் வாழ்க' வென்றே
 காக்கை சொன்னதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.