முகப்பு
சிறுவர்மணி

காலைக் காட்சி

 இனிய காலை புலர்ந்தது  இருளின் காட்சி மறைந்தது  பனிவிழுந்த சிலிர்ப்பிலே  பூக்கள் விழியும் மலர்ந்தது    சோலையெங்கும் பறவைகள்  சோர்வு நீங்கி பறக்குதே  கீழைவானில் கதிரவன்  குழந்தை போலச் சிரிக்குதே    மலர

Updated On : 20 செப்டம்பர் 2012, 6:37 am IST
பகிர்:

 இனிய காலை புலர்ந்தது

 இருளின் காட்சி மறைந்தது

 பனிவிழுந்த சிலிர்ப்பிலே

Advertisement

 பூக்கள் விழியும் மலர்ந்தது

 சோலையெங்கும் பறவைகள்

 சோர்வு நீங்கி பறக்குதே

 கீழைவானில் கதிரவன்

 குழந்தை போலச் சிரிக்குதே

 மலர்களிலே வண்டுகள்

 மயங்கிக் களித்துப் பாடுதே

 ஆலம்விழுதில் தென்றல்தான்

 அழகாய் ஊஞ்சல் ஆடுதே

 நூறு வண்ணம் காட்டியே

 நூதனமாய் வானிலே

 உருவம் மாற்றி மேகங்கள்

 ஊர்வலம்தான் போகுதே

 கண்ணுக்கினிய காட்சிகள்

 குவிந்துகிடக்கும் காலையில்

 இன்னும் என்ன தூக்கமோ

 எழுந்து வாவா நண்பனே!

 இனிய காலை புலர்ந்தது

 இருளின் காட்சி மறைந்தது

 பனிவிழுந்த சிலிர்ப்பிலே

 பூக்கள் விழியும் மலர்ந்தது

 சோலையெங்கும் பறவைகள்

 சோர்வு நீங்கி பறக்குதே

 கீழைவானில் கதிரவன்

 குழந்தை போலச் சிரிக்குதே

 மலர்களிலே வண்டுகள்

 மயங்கிக் களித்துப் பாடுதே

 ஆலம்விழுதில் தென்றல்தான்

 அழகாய் ஊஞ்சல் ஆடுதே

 நூறு வண்ணம் காட்டியே

 நூதனமாய் வானிலே

 உருவம் மாற்றி மேகங்கள்

 ஊர்வலம்தான் போகுதே

 கண்ணுக்கினிய காட்சிகள்

 குவிந்துகிடக்கும் காலையில்

 இன்னும் என்ன தூக்கமோ

 எழுந்து வாவா நண்பனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.