முகப்பு
சிறுவர்மணி

மாற்றுத் திறனாளிகள்...மகத்தான சாதனைகள்!

 அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் சில பகுதிகளில் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

ஹரியட் டப்மேன்

 அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் சில பகுதிகளில் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில், அவர்களை அடிமைகளாக நடத்தாத கனடா மற்றும் அமெரிக்காவின் வேறு சில பகுதிகளிலும் மிகவும் சாமர்த்தியமாகக் குடியேற உதவி செய்த வீரப் பெண்மணி - சமூகசேவகி ஹரியட் டப்மேன்.
 1800-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள பென்சில்வேனியா போன்ற இடங்களில் அடிமைகளை விலைக்கு வாங்குவது, விற்பது, அடிமைகளாக நடத்துவது போன்றவை நின்றுபோய் விட்டன.
 ஆனால், அதே அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள சவுத் கரோலினா போன்ற இடங்களில் கருப்பர்களை அடிமைகளாக நடத்துவது 1865-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது.
 இந்தக் காலகட்டத்தில் அடிமைகள் தப்பிச் செல்ல உதவி செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற சட்டமும் நடைமுறையில் இருந்தது.
 இந்தக் கொடூரமான காலத்தில்தான் ஹரியட் டப்மேன் தன்னுடைய கடுமையான முயற்சியால் முன்னூறுக்கும் மேற்பட்ட கருப்பின அடிமைகளை, அடிமைகளாக நடத்தாத, கருதாத வேறு இடங்களில் குடியேற மிகவும் தந்திரமான முறையில் அழைத்துச் சென்று, குடியேற வைத்து சுதந்திரமாக அவர்கள் வாழ வழி செய்தார்.
 இத்தகைய அருஞ்சாதனை புரிந்து வந்த ஹரியட் டப்மேன் மூளை சம்பந்தமான "நார்கோலெப்சி' என்னும் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களைத் தூக்கம் எந்த நேரமும் வந்து தாக்கும். நடக்கும்போது இந்நோய் தாக்கினால் தெருவோரங்களில் அமர்ந்து தூங்க ஆரம்பித்துவிடுவார்கள் இந்தவகை நோயாளிகள். பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று பேச்சை நிறுத்திவிடுவர். தொடர்ந்து அவர்களால் பேச முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. சில சமயங்களில் அவர்களுடைய மனதில் அதிகக் கற்பனையான காட்சிகள் தோன்றும்.
 இத்தகைய கொடூரமான நோய் ஹரியட் டப்மேனுக்கு ஏற்படக் காரணம் -
 அடிமைகள் மிகமிக மோசமாக நடத்தப்பட்ட சமயம். அவர் சிறுமியாக இருந்தபோது நிறைய சவுக்கடிகள் வாங்கியிருக்கிறார். தனது பன்னிரண்டாம் வயதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஓர் அடிமையைப் பிடித்துக் கட்டிப்போட, இவரது உதவியை ஒரு வெள்ளைக்காரன் கேட்டான். இவர் மறுக்கவே, இவருடைய தலையில் தனது கையிலிருந்த கனமான ஆயுதத்தால் ஓங்கி அடித்துவிட்டான். மண்டை பிளந்து குருதி கொட்டியது. அந்தப் பாதிப்பினால்தான் இவருக்கு அந்த விநோதமான வியாதி ஏற்பட்டது.
 1849-இல் நல்ல மனம் கொண்ட சில வெள்ளையர்கள் உதவியால் "ரகசிய பாதாள ரயில் பாதை' தொண்டர்களின் உதவியுடன் ஹரியட் டப்மேன் அடிமைகளாக நடத்தப்படாத பென்சில்வேனியாவில் குடியேறினார்.
 1851-ஆம் ஆண்டில் தன்னுடைய பெற்றோர்களை அதே முறையில் கனடாவில் குடியேற வைத்தார்.
 அடிமைகளை ரகசியமாக அழைத்துச் சென்ற முறையைத்தான் "பாதாள ரயில் பாதை' என்ற ரகசிய வார்த்தையாகப் பயன்படுத்தி வந்தனர்.
 -தொடரும்
 
 

முழு கட்டுரையைப் படிக்க →