முகப்பு
சிறுவர்மணி

அன்பை விதைத்தவர்!

மனித குலத்தை வாழ வைக்கமண்ணில் வந்து உதித்தவர்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

 மனித குலத்தை வாழ வைக்க
 மண்ணில் வந்து உதித்தவர்,
 "புனிதர்' என்றும், "மேய்ப்பர்' என்றும்
 போற்றும் "ஏசுநாதராம்'!
 
 மாட்டுத் தொழுவில் பிறந்து,"சூசை'
 மரியின் மடியில் தவழ்ந்தவர்!
 நாட்டில் இருந்த பழைமை போக்க
 நடந்து, தொண்டு செய்தவர்!
 
 அதிசயங்கள் செய்து காட்டி
 அன்பை எங்கும் விதைத்தவர்!
 எதையும் கேட்க, தட்டிப் பார்க்க
 இதயம் நிறையும் என்றவர்!
 
 கன்னம் ஒன்றில் அறைந்தால் மற்றோர்
 கன்னம் காட்டச் சொன்னவர்!
 மன்னிப்பு என்ற சொல்லின் மாண்பை
 மண்ணில் உணரச் செய்தவர்!
 மலையில் நின்று மக்கள் கேட்க
 மழைபோல் தந்தார் அறிவுரை!
 அலையும் மனதை அமைதியாக்கி
 அனைவரும் ஏற்றார் அவருரை!
 
 பத்து இரண்டு சீடர் கொண்டு
 பரப்ப வைத்தார் போதனை!
 புத்தி மாறி, காட்டிக் கொடுத்து
 ஒருவன் செய்தான் வேதனை!
 
 செய்த பாவச் சின்னம் என்றே
 சிலுவை சுமந்து சென்று, தன்
 மெய்யில் ஆணி அடித்த பேர்கள்
 மீதும் இரக்கம் கொண்டவர்!
 
 பாவி இருவர் நடுவில் நிறுத்தி
 பதைக்கச் செய்த போதிலும்
 ஆவி சோர, இரத்தம் சிந்தி
 அமுத மொழிகள் உரைத்தவர்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.