முகப்பு
சிறுவர்மணி

விதை!

மு.வரதராசனாரின் இல்லத்துக்கு திரு.வி.க. ஒருமுறை வந்திருந்தார். அப்போது அவரை உபசரிக்க அவருக்கு மாதுளம்பழம் வழங்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

மு.வரதராசனாரின் இல்லத்துக்கு திரு.வி.க. ஒருமுறை வந்திருந்தார். அப்போது அவரை உபசரிக்க அவருக்கு மாதுளம்பழம் வழங்கப்பட்டது.

அவரும் உரையாடிக் கொண்டே மாதுளம்பழத்தை உரித்தார். சாப்பிடத் தொடங்கினார். மாதுளை முத்துக்களை ஒவ்வொன்றாகச் சாப்பிட்டு விட்டு விதைகளைப் பக்கத்திலிருந்த வெற்றிடத்தில் துப்பிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது இல்லத்துக்குத் திரும்பி விட்டார்.

மு.வ. வீட்டில், அவர் துப்பிய மாதுளம் விதைகளில் ஒன்று சிறியதாக முளைக்க ஆரம்பித்தது.

அதைப் பார்த்த மு.வ. அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

நாளடைவில் அது ஒரு சிறிய மரமானது.

அந்தச் சமயத்தில் மு.வ. வீட்டை மாற்றியமைக்க நேரிட்டது. அப்போது மு.வ.வின் பிள்ளைகள் இடமின்மை காரணாக அந்த மரத்தை வெட்ட முடிவு செய்தனர்.

ஆனால், மு.வ. அதைத் தடுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் - "அம்மரம் தமிழைச் சுவைத்த வாயிலிருந்து தோன்றியது. எனவே வெட்ட வேண்டாம்..'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.