தந்தை பெரியார்
வணிகக் குடும்பம் பெற்றெடுத்தவயிர நெஞ்சம் வாய்த்தவராம்!
வணிகக் குடும்பம் பெற்றெடுத்த
வயிர நெஞ்சம் வாய்த்தவராம்!
துணிவும் பண்பும் நிறைந்திட்ட
தொண்டர் தந்தை பெரியாராம்!
சாதி இருளைப் போக்கிடவும்
சமத்துவம் எங்கும் நிலைத்திடவும்
வீதி தோறும் பகுத்தறிவாம்
விளக்கை ஏற்றி வைத்திட்டார்!
வீட்டில் இருந்த அனைவரையும்
விரும்பி அணியச் செய்ததுடன்
நாட்டில் உள்ள ஊரெல்லாம்
நடந்தே விற்றார் கதராடை!
கள்ளுக் கடையைத் திறக்காமல்
தடுத்துக் காத்து, காசுபணம்
அள்ளித் தந்திடும் தென்னைகளை
அழித்து, காந்தியம் பேணிட்டார்!
பெண்கள் உரிமை பெறச்செய்து
பேதமை நிறைந்த சமுதாயப்
புண்கள் தீர்க்கும் மருந்தாகப்
புரட்சிக் கருத்துகள் விதைத்திட்டார்!
ஆலயம் நுழையும் போராட்டம்
அழைத்து, உழைத்து வென்றவரை
ஞாலம் போற்றும் நல்லவராம்
"வைக்கம் வீரரை' வாழ்த்திடுவோம்!