முகப்பு
சிறுவர்மணி

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

உலகப் புகழ்பெற்ற பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று பல சிறப்புகளைப் பெற்றவர் ரே சார்லஸ். இவரது பாடல்கள் கேட்போர் உள்ளத்தை உருக்கக்கூடியவை. சில நேரங்களில் கேட்போரின் மனச்சாட்சியைத் தூண்டும் பாடல்கள். ஆத்மாவைத் தொடும் பாடல்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:52 PM
பகிர்:

பாடகர் ரே சார்லஸ்
 

உலகப் புகழ்பெற்ற பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று பல சிறப்புகளைப் பெற்றவர் ரே சார்லஸ். இவரது பாடல்கள் கேட்போர் உள்ளத்தை உருக்கக்கூடியவை. சில நேரங்களில் கேட்போரின் மனச்சாட்சியைத் தூண்டும் பாடல்கள். ஆத்மாவைத் தொடும் பாடல்கள்.
 பழைய தலைமுறையினரும் புதிய தலைமுறையினரும் விரும்பிய உன்னதமான பாடகர் ரே சார்லஸ். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்பெற்று விளங்கியவர்.
 பாப், ஜாஸ், ராக் என்று மேலைநாடுகளின் இசையில் எல்லாப் பிரிவுகளிலும் பாடி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர். இசைத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 'கிராமி' விருதைப் பன்னிரண்டு முறைகள் பெற்றவர்.
 மேடையில் இவர் தோன்றி பியானோ வாசித்துக் கொண்டே பாடும்போது, நிகழ்ச்சியைக் காண்போர் இவர் பாடி முடித்ததும் ஆனந்தக் கண்ணீர் விடுவர். மகிழ்ச்சியுடன் தாளம் போடுவர்.
 ரே சார்லஸ் எப்பொழுதும் கண்ணாடி அணிந்தே காட்சியளிப்பார். மேடையில் பாடும்போதும் கருப்புக் கண்ணாடியுடனேயே இருப்பார். என்ன காரணம் தெரியுமா?
 முற்றிலும் கண் பார்வை இழந்தவர் ரே சார்லஸ். பியானோ இசைப்பதற்கோ, இதர இசைக் கருவிகளை வாசிப்பதற்கோ இவருடைய பார்வையற்ற தன்மை தடையாகவோ, குறையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. இவருடைய செவிகள் மிகவும் கூர்மையானவை.
 ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்குகொண்டு பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும்போதுகூட, எங்கேயாவது யாராவது சுருதி பிசகி வாசித்தால் அதனைக் கண்டுபிடித்து சரி செய்யும் மிகக் கூர்மையான கவனிப்பும் தேர்ந்த இசை ஞானமும் பெற்ற மேதை ரே சார்லஸ்.
 இவர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பிரிவினைச் சேர்ந்தவர். 1930-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி தலைதூக்கியது. நடுத்தரக் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டனர். அதைவிட மோசமாக நிறவேற்றுமை தலைவிரித்தாடியது.
 இவர் தன்னுடைய ஏழாவது வயதில் கண்பார்வையை இழந்தார். பார்வையற்றவர்களுக்கான செயிண்ட அகஸ்டின் பள்ளியில் பயின்றார். பிரெயில் முறையில் பாடங்களையும் இசை வடிவங்களையும் எழுதும் முறைகளைக் கற்றுக் கொண்டார்.
 பியானோ வாசிப்பதில் மிகவும் ஈடுபாடு கொண்ட ரே சார்லஸ் பள்ளியில் படிக்கும்போதே இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டதுடன் பாடல்களுக்கு இசையமைப்பதையும் அவ்வாறு இசையமைத்த பாடல்களின் ஒலி வடிவங்களை பிரெயில் முறையில் பதிவு செய்வதிலும் கற்றுத் தேர்ந்தார்.
 ஆரம்ப காலங்களில் இரவு நேரக் கேளிக்கை விடுதிகளிலும் தேவாலயங்களிலும் பாடி வந்தார். இவர் இசைத் தட்டுகளுக்காகப் பாட ஆரம்பித்தபோது, இவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இவரது பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுகள் லட்சக்
 கணக்கில் விற்பனையாகின. சாதனைகளால் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் செயல்பட்டு, உலகப் புகழ்பெற்ற இசை மேதை
 களில் ஒருவரானார்.
 அமெரிக்க அரசு ரே சார்லஸýக்குப் பல விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியது. தன் இனத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைக்காகவும் உயர்விற்காகவும் குரல் கொடுத்தார்.
 காது கேளாதவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார்.
 10-06-2004-இல் காலமானார்.
 உலகம் முழுவதும் பரந்து காணப்படும் இவருடைய ரசிகர்கள், இவரது பாடல்களை இன்றளவும் குறுந்தகடுகளில் பதிவு செய்து வைத்து, கேட்டு, ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 பார்வையற்றவர் என்ற குறைபாடு அவரது முன்னேற்றத்துக்கோ புகழுக்கோ தடையாக ஒருபோதும் இருக்கவில்லை.
 
 -அடுத்த இதழில்:
 சூப்பர்மேன் கிறிஸ்டோபர் ரீவ்

 

முழு கட்டுரையைப் படிக்க →