முகப்பு
சிறுவர்மணி

கல்வி பற்றி காந்தியடிகள்

ஒவ்வொரு மாணவரும் தம் சமயத்தைப் பற்றியும் அது சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:47 AM
பகிர்:

1. மாணவருக்கு உண்மையான பாடப்புத்தகம் ஆசிரியரே.
 

2. ஆசிரியர் தாம் படித்துத் தெரிந்து கொண்டவைகளையெல்லாம் தன்னுடைய சொந்த நடையில் மாணவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 

3. சொல்லும் விஷயத்தைச் சுவையாகச் சொல்ல வேண்டும். சாதாரண வாய்மொழியாகச் சொல்பவற்றை வெகு எளிதாக மாணவரால் திரும்பச் சொல்ல முடியும்.
 

4. ஒவ்வொரு மாணவரும் தம் சமயத்தைப் பற்றியும் அது சம்பந்தமான நூல்களைப் பற்றியும் பொதுவாகத் தெரிந்திருப்பது அவசியம்.
 

5. ஆன்மா பற்றிய கல்வி என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அறியச் செய்து, தன்னை அறிவதும் ஆகும்.
 

6. கோழையாக இருக்கும் ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களை
 வீரர்களாக்கிவிட முடியாது.
 

7. மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையே கூடாது.
 

8. வெளிக்காற்றே
 படக்கூடாது என்று
 குழந்தைகளைப் பத்திரமாக மூடிவைத்து வளர்த்து
 விடுவதால் அவர்களைத் தீமைகள் பற்றாமல்
 விடுவதில்லை.
 

9. சிறுவர், சிறுமிகளைச் சேர்த்து வைத்துப்
 போதிக்கும்போது
 பெற்றோரும் ஆசிரியரும் கடுமையான
 சோதனைகளுக்கு
 ஆளாகிறார்கள்.
 

10. உண்மையான
 ஆசிரியராகவும் பாதுகாப்பாளாரகவும் இருக்க வேண்டுமாயின் மாணவர்களுடைய உள்ளங்களைத் தொடவேண்டும்.
 -அ.கருப்பையா,
 பொன்னமராவதி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.