முட்டைகள்...
• அமெரிக்காவில் வால் இல்லாத சில கோழி இனங்கள் நீல நிற முட்டைகளை இடும்.
• நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.
• அன்னப் பறவை பசுமை கலந்த வெண்ணிறத்தில் முட்டையிடும்.
• ஜப்பானிலுள்ள குயில்களின் முட்டைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
• ஆப்ரிக்காவிலுள்ள ஜிங் இனக் கோழிகளின் முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும்.
• பிணந்தின்னிக் கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.
• புள்ளிகள் மற்றும் கோடுகள் கொண்ட முட்டைகளை பவழக்கால் நாரைகள் இடும்.
• வரகு கோழிகளின் முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
• கருடனின் முட்டை சாம்பல் நிறம்.
• கடல் அர்ச்சின் என்ற பறவை ஆரஞ்சு நிற முட்டைகளை இடும்.
• செந்தலைக் கிளிகளின் முட்டைகள் வெண்ணிறத்தில் கோள வடிவில் இருக்கும்.
கண்கள்
• ஒரு நொடியில் 40-இல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருமுறை இமைப்பதற்கு கண்கள் எடுத்துக் கொள்கின்றன.
• சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.
• கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.
• ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனது கண்கள் வறண்டு போய் இறுதியில் அவன் குருடாகி விடுவான்.
• கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பது போல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக "கார்னியா' எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.
நகரங்கள்
• உலகின் மிகப் பழமையான தலைநகரம் டமாஸ்கஸ். சிரியா நாட்டின் தலைநகரமாக 4,500 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
• மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் முதன்மையானது டோக்கியோ. அடுத்தது மெக்ஸிகோ நகரம்.
• இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் மும்பை.
• பரப்பளவில் மிகப் பெரிய நகரம் குயீன்ஸ்லாந்திலுள்ள மவுண்ட் இஸô. இதன் பரப்பளவு 41,978 சதுர கி.மீ.
• 3,684 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலைநகரம் லாசா. திபெத்தின் தலைநகரம் இது.
• கடல் மட்டத்திலிருந்து 16,732 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம் வென்சுவான். 1955-ஆம் ஆண்டு திபெத்தில் இந்தகரம் உருவாக்கப்பட்டது.
• உலகில் செலவு அதிகமாகும் நகரம் டோக்கியோ.
• சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் - பெய்ஜிங் (சீனா).
• டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.
• கார்கள் அதிகம் உள்ள நகரம் நியூயார்க் (அமெரிக்கா).
-தொகுப்பு: த.ஜெகன், சரலூர்.
பட்டின் தாயகம் சீனா!
சீன தேசத்தின் சக்ரவர்த்தி ஹூவாங்-டை என்பவரின் மனைவி மகாராணி ஒருமுறை கையில் தேநீர்க் கோப்பையுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.
சற்றே ஓய்வு எடுக்க அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார். கையில் சூடான தேநீர்க் கோப்பை.
அப்பொழுது அந்தக் கோப்பையில் மேலிருந்து ஏதோ ஒரு பொருள் விழுந்தது.
அது என்னவென்று அவர் உற்றுப் பார்க்க, நிலக்கடலை அளவில் ஒரு பொருளின் பகுதிகள் கரைந்து நூல் நூலாகக் கோப்பைக்குள்ள சுழன்று கொண்டிருப்பதைக் கவனித்தார். மேலே பார்த்தார். அங்கிருந்த மல்பெரி மரத்திலிருந்துதான் அந்தப் பொருள் விழுந்தது என்பதைப் புரிந்துகொண்டார். அரசரிடம் இதுபற்றிக் கூறினார்.
பிறகென்ன? அரண்மனை அறிஞர்கள் எல்லோரும் சேர்ந்து மல்பெரி மரத்தை ஆராய்ச்சி செய்தார்கள். மரத்தில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டி இருப்பது தெரிய வந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பட்டுப்புழு கூடு சூடான நீர் பட்டதும் நூல் வடிவம் எடுக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.
அதன்பிறகு மடமடவென்று வேலைகள் நடந்தன.
தானாக வளர்ந்தது, முறையாக வளர்க்கப்பட்டது. சீனக் கைவினைஞர்கள் இந்தப் பட்டுப்புழுவிலிருந்து நூல் எடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார்கள். பட்டின் அத்தியாயம் தொடங்கிற்று.
-தங்க.சங்கரபாண்டியன், சென்னை.
தெரியுமா?
1. மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட பறவை - நெருப்புக் கோழி
2. நாக்கால் காதை சுத்தம்
செய்யும் விலங்கு -
ஒட்டகச்சிவிங்கி
3. நான்கு மூக்குகளை உடைய உயிரினம் - நத்தை
4. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை - ஆந்தை
5. வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு - மாடு
6. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் - டால்பின்
7. நுரையீரல் இல்லாத உயிரினம் - எறும்பு
8. பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை - ஹம்மிங் பறவை
9. துருவக் கரடிகள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்தும்? - இடது கை.
10. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் - எறும்புதின்னி
11. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? - எட்டு
12. மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஆக்டோபஸ்
13. உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் - ஸ்டோன் ஃபிஷ் (ஆஸ்திரேலியா)
14. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினம் - இறால் மீன்
15. உலகின் மிகப் பெரிய பாலூட்டி இனம் - நீலத் திமிங்கிலம்.
-தொகுப்பு:
நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.
கடவுளும் கிரேக்கரும்
கிரேக்கர்கள் ஒவ்வொரு கிரகங்கத்தையும் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
புதன் - தொழிலின் கடவுள்
வெள்ளி - காதல் மற்றும் அழகின் கடவுள்
செவ்வாய் - போரின் கடவுள்
வியாழன் - உயிர்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்
சனி - உழவின் கடவுள்
யுரேனஸ் - சொர்க்கத்தின் கடவுள்
நெப்டியூன் - கடலின் கடவுள்
புளூட்டோ - பாதாளத்தின் கடவுள்
-தொகுப்பு: இ.பார்கவி, ஸ்ரீரங்கம்.
நாடுகளும் பாராளுமன்றங்களும்
1. பூடான் - தேசிய அசெம்பிளி
2. சீனா - தேசிய மக்கள் காங்கிரஸ்
3. இங்கிலாந்து - பாராளுமன்றம்
4. இந்தியா - பாராளுமன்றம்
5. ஈராக் - தேசிய அசெம்பிளி
6. நேபாளம் - தேசிய பஞ்சாயத்து
7. போர்ச்சுக்கல் - கோர்ட்டஸ்
8. லிபியா - பொதுமக்கள் காங்கிரஸ்
9. கொலம்பியா - காங்கிரஸ்
10 தென் ஆப்ரிக்கா - அசெம்பிளி சபை
-தொகுப்பு: ப.ஜெயப்ரியா (எ) புவியரசி, வரிச்சிக்குடி.
ஆராய்ச்சி பிறந்தது!
மொகஞ்சதாரோ, ஹாப்பா புதைபொருள் ஆராய்ச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் புதைபொருள் ஆராய்ச்சி முதன் முதலில் எப்படி நிகழ்ந்தது?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஓர் இத்தாலி இளவரசன் அரண்மனைத் தோட்டத்தில் நீருக்காக கிணறு ஒன்றைத் தோண்டினான். அப்போது தர்செயலாக அந்த நிலத்தினடியில் புதைந்து போயிருந்த ஒரு நகரம் வெளிப்பட்டது. உலகத்தில் புதைபொருள் ஆராய்ச்சியைத் தூண்டிய முதல் நிகழ்வு இதுதான்...
-ஆதினமிளகி, வீரசிகாமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.