முகப்பு
சிறுவர்மணி

கோபம் - பொன்மொழிகள்

கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:40 PM
பகிர்:

1. எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்

2. கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில், நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவாய்.
-சீனம்

3. கோபத்தை வெளிக்காட்டுவது, குளவிக் கூட்டின் மீது கல்லெறிவதற்கு ஒப்பானது.
-மலபார்

4. கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.
-செனேகா

5. ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன், ஒரு நாளையத் துயரத்தை அடக்கியவனாவான்.
-முதுமொழி

6. கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
-கன்ஃபூசியஸ்

7. கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
-சுவாமி விவேகானந்தர்

8. மனம்போன போக்கில் நடப்பதற்கு மிக முக்கியமான காரணம் கோபம்தான். அதிகச் செலவுகளையும் மனச்சுமைகளையும் உண்டாக்கும் பொருளான கோபத்தைச் செலவழிப்பதில் மிகவும் கஞ்சனாக இருங்கள்.
-ஜார்ஜ் வில்லியம் கர்ட்ஸ்

9. சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.
-வேதாத்திரி மகரிஷி

-அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.