சிறுவர்மணி

இராணுவ வீரர்கள்

 இராணுவத்தின் வீரர்கள் எல்லை காக்கும் தோழர்கள்!

செ. சத்தியசீலன்

 இராணுவத்தின் வீரர்கள்
 எல்லை காக்கும் தோழர்கள்!
 ஏறுநடை போட்டிடும்
 இணையில்லாத் தியாகிகள்!
 
 கொட்டும் பனியின் குளிரிலே
 கோடைக் கால வெயிலிலே
 கட்டுப்பாட்டில் நிற்கிறார்!
 கடமை யாற்றி வருகிறார்!
 
 வெள்ளம் விபத்து நேர்ந்திடில்
 விரைந்து வந்தே உதவுவார்!
 நல்ல சட்டம் ஒழுங்குதான்
 நாட்டில் நிலவச் செய்கிறார்!
 
 போர்முனையில் வெற்றியை
 போராடியே அடைகிறார்
 நேர்முனையில் பகைவர்கள்
 நிற்கக் கண்டால் சுடுகிறார்!
 
 போரில் இறந்த போதிலும்
 புகழ்நிலைக்கச் செய்கிறார்!
 நாமும் அவர்கள் போலவே
 நமது கடமை ஆற்றுவோம்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT