முகப்பு
சிறுவர்மணி

பாரதியார்

 பாரதத் தாயின் வீரப் புதல்வர் பாரதியார்!... எங்கள் பாரதியார்...!

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:45 PM
பகிர்:

 பாரதத் தாயின் வீரப் புதல்வர்
 பாரதியார்!... எங்கள் பாரதியார்...!
 பாரத மக்கள் எழுந்திட சுதந்திரப்
 பள்ளி எழுச்சி பாடியவர்!
 
 முறுக்கு மீசை! நெருப்புக் கண்கள்..!
 முண்டாசுக் கவிஞர் பாரதியார்..!
 சிறுமைகள் பொசுங்கிட தீப்பொறி கவிதைகள்
 தீட்டிய கவிஞர் பாரதியார்..!
 
 பாப்பா பாட்டில் பாலர்க்கு நல்ல
 பண்புகள் உரைத்த பாரதியார்..!
 ஆத்திச் சூடி புதிதாய்ப் பாடி
 அறிவுரை கூறிய பாரதியார்..!
 
 சாதிகள் இல்லை! ஆணும் பெண்ணும்
 சமத்துவம் என்ற பாரதியார்..!
 பேதைமை நீங்கிட அச்சம் தவிர்த்திட
 பாடிய மகாகவி பாரதியார்..!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.