சிறுவர்மணி

சொல் விளையாட்டு

சு. சுப்புராமன்

 உயிர்காக்கும் வேளாண்மை உழவாகும்
 ஒற்றர்களின் வேலைதான் உளவாகும்
 பயிராகும் ஒருதானியம் தினையாகும்
 பகுத்தறியும் ஒழுக்கமே திணையாகும்
 மண்மாதா வழங்கும் நிலக் கரியாகும்
 மனிதர்கள் உண்ணும்காய் கறியாகும்
 பண்ணுகின்ற குற்றமே கறையாகும்
 பண்பாடும் கடலோரம் கரையாகும்.
 
 கடல்நீரின் ஆர்ப்பாட்டம் அலையாகும்
 கனிவோடு வரவேற்றல் அழைப்பாகும்
 உடலினது நடுப்பகுதி அரையாகும்
 வீடுகளின் ஒருபகுதி அறையாகும்
 மலைப்பிளவில் தங்கும்நீர் சுனையாகும்
 மேதைகளின் கூர்மையே சுணையாகும்
 மலரிணைத்துக் கட்டுவது கண்ணியாகும்
 சிறுமிக்குப் பின் பருவம் கன்னியாகும்
 
 கும்மிருட்டை நீக்குவது ஒளியாகும்
 குரல்வளையில் தோன்றுவது ஒலியாகும்
 குதித்தோடும் குதிரைதான் பரியாகும்
 கள்வர்கள் கவர்வதுதான் பறியாகும்
 கொஞ்சுமொழி பேசுவது கிளியாகும்
 கவிஞர்பெறும் பரிசுபொற் கிழியாகும்
 அஞ்சியோடும் மான்கூட கலையாகும்
 அரியசுவைத் தீங்கரும்பும் கழையாகும்

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT