நவம்பர் மாதம்
பிரபலங்களின் பிறந்த தினங்கள்
1 1915 வி.ஆர். கிருஷ்ண அய்யர். முன்னாள் தலைமை நீதிபதி.
3 1933 அமர்த்தியாசென். நோபல் பரிசு பெற்ற
இந்தியப் பொருளாதார மேதை.
4 1929 சகுந்தலா தேவி. கணித மேதை.
5 1988 விராத் கோலி. இந்திய கிரிக்கெட் வீரர்.
7 1867 கியூரி அம்மையார். 2 முறை நோபல் பரிசு
பெற்றவர். ரேடியம் கண்டவர்.
7 1888 சர்.சி.வி. ராமன். இந்தியா சார்பில்
பெüதிகத்திற்கு நோபல் பரிசு.
7 1954 கமல்ஹாசன். தமிழ், இந்தி, மலையாளம், போன்ற திரைப்படங்களில் நடித்தவர். திரைப்படத் தயாரிப்பாளர்.
8 1927 எல்.கே.அத்வானி. முன்னாள் மத்திய மந்திரி.
8 1976 பிரட் லீ.ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்.
10 1910 கொத்தமங்கலம் சுப்பு. எழுத்தாளர், கவிஞர், தில்லானா மோகனாம்பாள் திரைப்படக்
கதாசிரியர்.
11 1899 கி.ஆ.பெ.விஸ்வநாதம். கல்வியாளர்,
எழுத்தாளர்,பேச்சாளர்.
12 1910 சில்வரினி ஷேர். மேகாலயாவில்
முதன் முதலாக பத்மஸ்ரீ பெற்ற பெண்.
12 1896 சலீம் அலி. பறவைகளின் தோழர். பறவை ஆராய்ச்சியாளர்.
12 1961 நடியா எலெனா கொமனேசி. ஒலிம்பிக்
வீராங்கனை. 1976} ஒலிம்பிக் : 3 தங்கம்,
1980, 2 தங்கம்.
14 1889 ஜவஹர்லால் நேரு, சுதந்திரப்போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி.
15 1986 சானியா மிர்ஸô. இந்திய டென்னிஸ்
வீராங்கனை.
19 1917 இந்திரா காந்தி. இந்தியாவின் முதல்
பெண் பிரதமர்.
21 1939 முலயாம் சிங் யாதவ். எம்.பி. ஆர்.ஜே.டி.
கட்சித்தலைவர்.
22 1892 மீரா பென். வெளிநாட்டவரான இவர்
காந்தியடிகளின் சிஷ்யை.
23 1830 ஜக்காரி பாய். சுதந்திரப் போராட்ட
வீராங்கனை.
23 1926 பகவான் சத்ய சாய்பாபா.
26 1921 வர்கீஸ் குரியன், அமுல் ஸ்தாபகர்.
வெண்மைப் புரட்சியின் தந்தைய.
27 1940 புரூஸ் லீ. குங்ஃபூ கலையின் நாயகன்.
29 1908 என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ்த் திரைப்பட
நடிகர். கலைவாணர்.
30 1835 மார்க் ட்வைன். அமெரிக்கா எழுத்தாளர்.
30 1858 சர். ஜெகதீஸ் சந்திர போஸ். பெüதிக
விஞ்ஞானி.
30 1874 சர். வின்ஸ்டன் சர்ச்சில். முன்னாள்
பிரிட்டிஷ் பிரதமர்.
நினைவு தினங்கள்
1 1959 எம்.கே.தியாகராஜ பாகவதர்.
திரைப்பட நடிகர்.
3 2012 கைலாஷ்பதி மிஸ்ரா. முன்னாள் பீகார் அமைச்சர், கவர்னர்.
3 2012 "ஹான் சூயின்' சைனாவில் பிறந்த ஆங்கில எழுத்தாளர்.
7 2002 சி.சுப்ரமணியம். முன்னாள் மத்திய, மாநில அமைச்சர், கவர்னர்.
7 1993 கிருபானந்த வாரியார். இந்துமத ஆன்மிகச் சொற்பொழிவாளர்.
8 1987 சக்தி கிருஷ்ணசாமி, கதை, நாடக,
சினிமா வசனகர்த்தா.
10 1977 தமிழ்வாணன். கல்கண்டு ஆசிரியர். நாவல்கள் பல எழுதிய எழுத்தாளர்.
11 2004 யாசர் அராபத்.
பாலஸ்தீன மக்கள் தலைவர்.
11 2013 ஸ்ரீவேணுகோபாலன் என்கிற புஷ்பா
தங்கதுரை. எழுத்தாளர், நாவலாசிரியர்.
17 1928 லாலா லஜபதிராய். சுதந்திரப் போராட்ட வீரர்.
17 1973 ஸ்ரீஅன்னை. ஆன்மீகவாதி, அரவிந்தர்
ஆசிரமம்.
18 1936 வ.உ.சிதம்பரம். செக்கிழுத்த செம்மல்.
கப்பலோட்டிய தமிழன்.
21 1970 சர்.சி.வி.ராமன். நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி.
22 1963 ஜான்.எஃப்.கென்னடி. அமெரிக்காவின்
முன்னாள் 35ஆவது ஜனாதிபதி.
சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
9 கம்போடியா
11 அங்கோலா
20 உக்ரைன்
26 லெபனான்
28 அல்பேனியா, பனாமா, மெü டானியா
30 பார்படோஸ்
முக்கிய நிகழ்வுகள்
1 1954 பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து
விடுதலை பெற்றது.
1 1956 ஆந்திரப்பிரதேசம் உருவாக்கப்பட்டது.
1 2000 இந்தியாவின் 26ஆவது மாநிலமாக சத்தீஸ்கர் உருவானது.
3 1957 ரஷ்யா விண்வெளிக்கு ஸ்புட்னிக் 2 ஒரு நாயை அனுப்ப } அது இறந்து போனது.
3 1847 சர் ஜேம்ஸ் சிம்ப்ஸன் க்ளோரோஃபார்ம்
கண்டுபிடித்தார்.
4 1908 வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள்
சுதந்திரப்போராட்ட வீரர் 40ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கோவை
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
5 1896 கன்னிமாரா பொது நூலகம் திறக்கப்பட்டது.
6 1860 அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் 16ஆவது அதிபராக ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6 1884 அமெரிக்காவின் முதல் ஜனாதிபதிக்கு
நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டது.
9 1985 உலகச் செஸ் சேம்பியனாக ரஷ்யாவின்
"கார்பசேவ்' தேர்வு செய்யப்பட்டார்.
9 2000 இந்தியாவின் 27ஆவது மாநிலமாக
"உத்தராஞ்சல்' அறிவிக்கப்பட்டது.
10 1970 சீனப்பெருஞ்சுவர் பயணிகளுக்காகத்
திறந்து விடப்பட்டது.
11 1975 இந்தியாவில் பூனாவில் நடமாடும் அஞ்சலகம் செயல்படத் தொடங்கியது.
12 2010 சீனாவில் குவான்சு நகரில் 16வது ஆசிய
விளையாட்டுப் போட்டி துவங்கியது.
13 1964 இந்தியாவில் முதன் முதலாக நேருவின் நாணயம் வெளியிடப்பட்டது.
13 1971 அமெரிக்காவின் மரைனர் 9 என்ற விண்கலம் செவ்வாயைச் சுற்றி வந்தது.
13 2000 இந்தியாவில் 28ஆவது மாநிலமாக
"ஜார்க்கண்ட்' உதயம்.
16 1664 சென்னையில் சர் எட்வர்டு வின்டர் சென்னை மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
16 1971 வங்க தேசம் உருவானது.
17 1869 எகிப்தில் மத்திய தரைக் கடலையும்
செங்கடலையும் இணைத்து "சூயஸ் கால்வாய்' செயல்பாட்டுக்கு வந்தது.
19 1994 உலக அழகியாக "ஐஸ்வர்யா ராய்'
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
19 2012 இந்திய விண்வெளி வீராங்கனை
"சுனிதா வில்லியம்ஸ்' சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 127 நாட்கள் தங்கி
திரும்பிய நாள்.
20 1918 பாரதியார் புதுவையிலிருந்து கடலூர்
வந்தபோது கைதாகி 34 நாட்கள் கடலூரின் சிறைச்சாலையில் இருந்தார்.
21 1877 தாமஸ் ஆல்வா எடிசன் "கிராமஃபோன்' கண்டுபிடித்தார்.
21 1947 சுதந்திர இந்தியாவின் அஞ்சல் தலை
முதன் முதலாக வெளியிடப்பட்டது.
22 2005 ஜெர்மனியின் முதல் பெண் அதிபர்
"ஏஞ்ஜெலோ மேர்க்வெல்' பதவி ஏற்றார்.
23 2013 இந்தியா முழுதும் நீதிமன்றங்களில் "லோக் அதாலத்' என்ற மக்கள் மன்றம் மூலம் ஒரே நாளில் 13,80,000 வழக்குகள் தீர்வானது.
25 1867 ஆல்ஃபிரெட் நோபல் டைனமைட்டுக்கான காப்புரிமை பெற்றார்.
27 1895 பாரீஸில் நோபல் பரிசை ஆல்பிரெட் நோபல் அறிவித்தார்.
28 2006 அமெரிக்காவின் நியூ ஹாரிஸன்ஸ் ஆளில்லாத விண்கலம்
சூரியனைச் சுற்றிவரும் புளூட்டோவின் படத்தை பூமிக்கு அனுப்பியது.
29 1962 பர்மாவைச்சேர்ந்த "ஊதாண்ட்'
ஐ.நா. சபையின் செயலாளரானார்.முக்கிய தினங்கள்
1 முதல் 7 வரை-விழிப்புணர்வு வாரம்
6 போர் மற்றும் ஆயுதப்
போராட்டத்திறகு எதிரான நாள்.
11 தேசீய கல்வி தினம்
14 குழந்தைகள் தினம்
14 சர்க்கரை எதிர்ப்பு நாள்
15 உலக தத்துவ தினம்
19 தேசிய ஒருமைப்பாடு தினம்
19 சர்வ தேச ஆடவர் தினம்
21 மீனவர் தினம்
25 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்
26 இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்
30 கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம்
தொகுப்பு :
வி.ராமலிங்கம்,
சென்னிமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.