பொதுநலம்! சுயநலம்!
பெரியார் ஒருசமயம் தொடர் வண்டிப் பயணத்திற்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
பெரியார் ஒருசமயம் தொடர் வண்டிப் பயணத்திற்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் ஒருவர் பேட்டி கண்டார். கேள்விகள் அனைத்தும் எதிர்பாராதவையாகஇருந்தன. அவர், "தாங்கள் அடிக்கடி "பொது நலம்' பற்றிப் பேசுகிறீர்களே! "பொது நலம்' என்றால் என்ன? என்று கேட்டார். பெரியார் தயக்கம் ஏதும் இன்றி ""இதோ மழை பெய்கிறதே'' என்று சுட்டிக்காட்டி இதுதான் "பொது நலம்' என்றார். அடுத்த கேள்வி அப்படி என்றால் "சுயநலம்' என்றால் என்ன? என்று கேட்டார். "இதோ எல்லோரும் குடையைப் பிடித்துக்கொண்டு நடக்கிறோமே'' அதுதான் சுயநலம் என்றார் சிரித்துக்கொண்டே. பெரியாரின் சிந்தனைக் கருத்து அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.