சிறுவர்மணி

கருவூலம்: காலத்தை வென்ற கலாம்!

அவுல் பக்கிர் ஜெயினுலாப்தீன் அப்துல்கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் ஆவார்.

நெ.லக்ஷ்மி

அவுல் பக்கிர் ஜெயினுலாப்தீன் அப்துல்கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் ஆவார்.

இளமைக்காலம்:

தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் 15.10.1931 அன்று பிறந்தார்.இவரது தந்தை ஜெய்நுலாப்தீன் தாயார் திருமதி ஆஷியம்மா ஆவர்.இவரது தந்தை ஒரு சிறு படகு வைத்திருந்தார்.அதைக்கொண்டு இந்து யாத்ரிகர்களை தனுஷ்கோடிக்கும் இராமேஸ்வரத்திற்கும் அழைத்துச்செல்வார். மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆகவே கலாம் சிறு வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்து பொருள் ஈட்டி உள்ளார். இராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தபின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் முடித்தார். இதைக் தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு சென்னை எம் ஐ டியில் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங்கில் சேர்ந்தார். பிறகு 1958 இல் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். 1963 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். தும்பா விண்வெளி ஆய்வு நிலையத்தில் திட்ட அலுவலராக பணிபுரிந்தார். முழுக்க முழுக்க இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் தாயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். ஏழ்மையிலும் ஊக்கம்,தோல்வியிலும் விடா முயற்சி ஆகியவற்றிற்கு கலாமே சிறந்த உதாரணம் ஆவார்.

பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக், அக்னி ஆகிய ஆகிய ஏவுகனைகளின் வெற்றி இவரின் தலைமையில் தான் கிடைத்தது. அணுஆயுதம் தயாரிப்பை வல்லரசுகள் மட்டுமே செய்து வந்தன. பிற நாடுகள் தயாரிக்க தடைவிதித்தன, இத்தகைய சூழ்நிலையில் கலாம் தலைமையிலான அணு விஞ்ஞானிகள் குழு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில்

1998 ஆம் ஆண்டு மே 11,13, ல் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தினார்.

இவர் இந்திய "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம்' மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாகவும் அறிவியல் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

குடியரசுத் தலைவராக:

கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு கலாம் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவரானார்.

25.07.2002 முதல் 25.07.2007 முடிய குடியரசு தலைவராக பணியாற்றினார். இந்திய குடியரசு தலைவர்களிலேயே "பாரத ரத்னா விருது' பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் இவரே ஆவார். (இவருக்கு முன்னால் இந்த விருதை பெற்ற குடியரசு தலைவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்னன் மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோர் ஆவர்)

நதி நீர் இணைப்பு, தாவர எரிபொருள் உற்பத்தி, கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டம், ஆகியவை இந்தியாவிற்கு முக்கிய தேவைகள் ஆகும் என குறிப்பிட்டார். உலகின் உயர்ந்த போர்க்களமும் பனி சிகரமுமான சியாச்சின் மலைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏப்ரல் 2, 2004 ல் சென்றார். அங்கு வீரர்களிடம உரையாற்றிய முதல் குடியரசுத் தலைவர் அவர்தான்.

அவரது கனவு திட்டங்களுள் உள் நாட்டிலேயே மருத்துவ அறிவியல் சாதனங்கள் தயாரித்தல் மிக முக்கியமானது ஆகும். இதனால் ஏழை எளிய மக்களும் குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி பெறுவர். இவர் இந்திய பாதுகாப்புக்கும் தொழில்நுட்பத்துக்கும் அளவிட முடியாத சேவை ஆற்றியுள்ளார். எனவே ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். மக்களிடம் அன்போடு பழகியதால் மக்களின் ஜனாதிபதி என்று போற்றப்படுகிறார்.

தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களை எல்லாம் கிராமப்புற நூலகங்களுக்கு அளித்தார். தனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசுப்

பொருள்களை எல்லாம் அரசு அருங்காட்சியங்களுக்கு அளித்துவிட்டார்.

மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளில் உள்ள உலோகம் மிகவும் லேசாக இருக்கவேண்டும். இத்தகைய உலோகங்களையே விண்வெளிக் கலங்களில் பயன்படுத்துவர். இவ்வுலோகங்களை மாற்று திறனாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியவர் இவரே.

குடியரசு தலைவர் பதவிக்கு பின்னால் பல கல்லூரிகளுக்கு கௌரவ பேராசிரியராகவும் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

விருதுகள்:

இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1981ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதும் 1990இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கியது. 1997 ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. டாக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பான் விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிளான மோடி விருது, விஞ்ஞான தொழிற்நுட்பத்திற்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத் தக்கவை. ஏறத்தாழ 30 பல்கலைக்கழகங்கள் இவரை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.

எழுதிய நூல்கள்:

  • இந்தியா 2020

  • அக்னி சிறகுகள்

  • பற்றவைக்கப்பட்ட மனங்கள்

  • குறிக்கோள் 3 பில்லியன்

  • திருப்புமுனைகள் ஆகியவை இவர் எழுதிய நூல்கள் ஆகும்.

உங்களுக்கு தெரியுமா?

இவர் தமிழ் மொழியை மிகவும் நேசித்தார். எளிய சொற்களில் உயரிய கருத்துக்களை உடைய தமிழ் கவிதைகளை இவர் எழுதி உள்ளார்.

தாவர இயலில் ஆர்வமுள்ளவர். இவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்த புதிய வகை ரோஜாச் செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றனவாம்! ஒரு மரம் அல்லது தாவரத்தைப் பார்த்தவுடன் அதன் தாவரஇயல் பெயரைக் குறிப்பிடுவாராம்!

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்திலுள்ள அனைத்து நூல்களையும் கணிப்பொறியில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்!

ஒரு முறை மிசோரம் தலைநகர் "ஐஸ்வால்'-இல் பனி மூட்டமாக இருந்தது! இவர் கிளம்ப வேண்டிய விமானம் பனிமூட்டம் காரணமாக "டேக் ஆஃப்' செய்ய முடியவில்லை! அப்போது இவரே ஓடுபாதையில் எலக்ட்ரிக் லேன்டர்ன் (டார்ச் போன்று) வைத்து விமானத்தை டேக் ஆஃப் செய்தார்!

இந்தியக் குடியரசு தலைவர்களிலேயே இசைக் கருவி வாசிக்கத் தெரிந்தவர் இவர் மட்டுமே! இவர் விரும்பிய இசைக் கருவி வீணை ஆகும். முழுமையாக வீணை வாசிக்கும் திறமையுடையவர்.

தினந்தோறும் கர்நாடக இசை பக்தி பாடல்களை கேட்கும் வழக்கம் உடையவர்.

வாழ்வியல் தத்துவங்களை அறிந்து கொள்ள தினந்தோறும் பகவத் கீதையை படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

இவர் சைவ உணவு பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

திருக்குறளை மிகவும் நேசித்தார்.

தனது கருத்துக்களை பரப்ப மாணவர்களையே அவர் தேர்ந்தெடுத்தார். எனவேதான் மாணவர்களை அடிக்கடி சந்தித்தார்.

"கனவு காணுங்கள்' என்றார்! அது தூக்கத்தில் வரும் கனவு அல்ல! நம்மை தூங்க விடாமல் செய்யும் கனவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிஎஸ்கேவில் இணைந்த சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி!

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

SCROLL FOR NEXT