முகப்பு
சிறுவர்மணி

வள்ளல்!

விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது குறும்புத்தனத்துடன் அன்பு நிறைந்தவராக இருந்தார். வீட்டிலிருந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் வாரி வழங்கி விடுவார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது குறும்புத்தனத்துடன் அன்பு நிறைந்தவராக இருந்தார். வீட்டிலிருந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் வாரி வழங்கி விடுவார். அவர் வீட்டுக்கு சாதுக்களும், பிச்சைக்காரர்களும் நாடி வருவது வழக்கம். அப்போது வீட்டிலிருக்கும் எவ்வளவு உயர்வான பொருளாக இருந்தாலும் அப்படியே வழங்கி விடுவார். பொருளின் மதிப்பை அறியாது கொடுத்துவிடுகிறாரே என்று அவரது தாயார் வருந்தினார். ஒருநாள் சாதுக்களும், பிச்சைக்காரர்களும் வரும் நேரத்தில் அவரைத் துணிகள் இருக்கும் அறையில் வைத்துப் பூட்டிவிட்டார். விவேகானந்தருக்கு வசதியாகப் போய்விட்டது. தெருவில் செல்லும் சாதுக்களையும், பிச்சைக்காரர்களையும் கூப்பிட்டு சன்னல் வழியாகத் துணிகளைத் தூக்கிப் போட்டு மகிழ்ந்தார். அவர்களும் ஆசீர்வதித்துச் சென்றனர். வருங்காலத்தில் அருட்செல்வத்தை அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வதற்கு இதுவே அடையாளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.