நாக்கு மொழிகள்
* யாகாவாராயினும் நா காக்க
-திருவள்ளுவர்
* நாக்கின் ருசியையும், பேச்சையும் கட்டுப்படுத்துபவன் வெற்றி பெறுவான்.
-காந்தியடிகள்
* சோம்பேறியின் நாக்கு சுறுசுறுப்பாக இயங்கும்.
-அடிஸன்
* எலும்பில்லாத நாக்கு எல்லோரையும் நொறுக்குகிறது.
-ஆனன்
* கால்களால் பறவை சிக்கும். நாவினால் மனிதன் சிக்குவான்.
-தாமஸ் புல்லர்
* நாக்கு ஒரு கூர்மையான ஆயுதம்.
-இர்விங்
* மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் அவனது நாக்குதான்.
-பிளாட்டோ
* மூடனின் நாக்கு துருப்பிடிப்பதேயில்லை.
-புத்தர்
* பற்கள் உழைக்கின்றன. நாக்கோ சுவைக்கிறது.
-கலீல் சிப்ரான்
* இனிய மொழிகள் பேசும் நாக்கு எல்லா கதவுகளையும் திறந்துவிடும்.
-அரிஸ்டாட்டில்