சிறுவர்மணி

முத்துக் கதை: பிரார்த்தனையில் உண்மையான அர்த்தம்!

பாதிரியார் புருனோ என்பவர் இரவு நேரப் பிரார்த்தனையில் இருந்தார். அப்போது சில தவளைகள் கத்திக் கொண்டிருந்தது!

சரஸ்வதி பஞ்சு

பாதிரியார் புருனோ என்பவர் இரவு நேரப் பிரார்த்தனையில் இருந்தார். அப்போது சில தவளைகள் கத்திக் கொண்டிருந்தது!

தன் பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்த தவளைகளின் கத்தலை குறைக்க அவர் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எந்தப் பலனும் இல்லை! மிகவும் கோபம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக, ""தவளைகளே! கத்துவதை நிறுத்துங்கள்! நான் பிரார்த்தனையில் இருக்கிறேன்.'' என்று கூறினார்.

மதகுருவின் கட்டளைக்கு பயந்து எல்லாத் தவளைகளும் அவருடைய பிரார்த்தனைக்கு வசதியாக கத்துவதை நிறுத்திக்கொண்டு அமைதியாக இருந்தன.

அப்போது அவரது ஆழ்மனதிலிருந்து ஒரு குரல் கேட்டது.

""உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளின் கத்தல்களிலும் கடவுள் மகிழ்ச்சி அடையலாம் அல்லவா?''

""தவளைகளின் காட்டுக் கத்தல் கடவுளுக்கு எப்படி சந்தோஷத்தைக் கொடுக்கும்?''என்று பாதிரியார் எரிச்சலுடன் கேட்டார்.

மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

""கடவுள் ஒலியை எதற்காகக் கண்டுபிடித்தார்?''

புருனோ "எதற்காக?' என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அவர் ஜன்னல் வழியாகக் கட்டளை இட்டார்.

""தவளைகளே பாடுங்கள்!''

உடனே தவளைகள் கத்தத் தொடங்கின! அவைகள் கத்துவதை நிறுத்தாமல் இருப்பதுதான் இரவின் உண்மையான அமைதி என்பதை அவரால் உணர முடிந்தது. தவளைகளின் கத்தலிலும் சுருதி லயத்தோடு கூடிய ஒரு தேவகானம் அவருக்குப் புலப்பட்டது!

பிரார்த்தனையின் உண்மையான அர்த்தத்தை புருனோ இப்போது புரிந்து கொண்டார்!

-அந்தோணி டி மெல்லோ எழுதிய  "தவளையின் பிரார்த்தனை' என்ற நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராட்சத ராட்டினங்கள் இயக்கக் கட்டுப்பாடுகள்

ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

சமகால தலைமுறையினருக்கு இலக்கியங்களின் தேவை அவசியமானது

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

ஒரு மாதமாக குடிநீா் கிடைக்காத பூக்குழி கிராமம்: ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு புகாா்

SCROLL FOR NEXT